வலைபக்கத்தில் உள்ள படங்களை எளிய முறையில் சேவ் செய்வது எப்படி?

நீங்கள் வலைபக்கத்தில் உலா வரும் போது பல புகைபடங்களை நீங்கள் உங்கள் கணினியில் சேமிக்க விரும்புவீர்கள். அத்தகைய படங்களை நமது மவுஸினால் வலது கிளிக் செய்து அந்த படத்தை நம்முடைய  கணினியில் சேமிப்போம். இதுவே அந்த வலைபக்கத்தில் சுமாராக 10 அல்லது 20 படங்களுக்கு மேல் இருந்தால் அதனை சேமிக்க நாம் 10 அல்லது 20  முறை நம்முடைய மவுஸை வலது கிளிக் செய்து சேமிக்கத் தேவையில்லை.

Save bulk images

உங்களிடம் Firefox இணைய உலாவி இருந்தால் இந்த வேலையை செய்வது மிகவும் சுலபமே. இதற்காக நீங்கள் எந்த ஒரு மென்பொருளோ அல்லது Firefox நீட்சியோ(Addon) உங்கள் கணினியில் நிறுவத் தேவையில்லை.  உங்கள் கணினியில் Firefox மட்டும் நிருவியிருந்தாலே போதுமானது. முதலில் புகைப்படங்கள் இருக்கும் ஏதாவதொரு வலைப்பக்கத்தை திறந்து கொள்ளவும். வலைப்பக்கம் முழுவதும் லோடானவுடன் Firefox address bar இல் உள்ள ஐகானை கிளிக் செய்யவும். பின்னர் அதில் உள்ள More Information என்கிற பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு popup window திறக்கும். அதில் உள்ள Media பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு அந்த வலைபக்கத்தில் உள்ள அனைத்து Resource File களும் அதாவது அந்த பக்கத்தில் உள்ள படங்கள், அனிமேஷன்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் பட்டியலிடப்படும்.

Save bulk images from a webpage

இதில் Ctrl+A கொடுத்து அனைத்து கோப்புகளையும் தேர்வு செய்து அதில் உங்களுக்கு தேவையில்லாத கோப்புகளை மட்டும் நீக்கி விட்டு Save As பட்டனை கிளிக் செய்து அனைத்து கோப்புகளையும் ஒரே நேரத்தில் செமித்துக்கொள்ளவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 30%



பகிர்வு

8 Responses to “வலைபக்கத்தில் உள்ள படங்களை எளிய முறையில் சேவ் செய்வது எப்படி?”

  1. [...] This post was mentioned on Twitter by Saran Lingam. Saran Lingam said: RT @pudhuvai: வலைபக்கத்தில் உள்ள படங்களை எளிய முறையில் சேவ் செய்வது எப்படி? http://bit.ly/anq5l3 … [...]

  2. Jai says:

    Hi.. Mohanakrishnan Ramalingam…..how to save the images in Google chrome web bower. let me know ?

    Regards
    Jai

  3. Tamilfa says:

    Thanks …………From Tamilfa

  4. இது ஒரு அருமையான செயல்முறை. இது போல் குரோம் பாவனையாளர்களுக்கும் ஏதும் இலகுவான வழி இருந்தால் அறியத்தாருங்கள்.

  5. நன்றி திரு பிரகாஷ், Tamilfa, திரு ஜெய். உங்களுக்கான பதிலை அவசியம் தெரிவிக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

  6. manmadhan says:

    useful info. keep rocking

  7. manmadhan says:

    Good info
    keep rocking

  8. நன்றி திரு மன்மதன்.

Leave a Reply

Security Code: