புதுவை Forum பற்றி உங்களுடைய கருத்து என்ன?

புதுவை.காம் வாசகர்களுக்கு வணக்கம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை எண்ணி நாங்கள் உங்களுடைய கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

Forum என்பது அந்த தளத்தின் வாசகர்களே தங்களின் கருத்தையும், தகவல்களையும் மற்றும் அவர்களுடைய பல்வேறு படைப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு இடம். இதனால் அனைவருக்கும் பலன்கள் உண்டு. விருந்தினர்கள் மற்றவர்கள் அளித்துள்ள செய்திகளையும் மென்பொருள் போன்றவைகளை எல்லாம் பதிவிறக்கிக்கொள்ளலாம். உங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்கலாம். மற்றவர்கள் முன் வந்து உங்களுக்கு உதவுவார்கள் அதே போல தாங்களும் மற்றவர்களுக்கு உதவலாம்.

இந்த பாரத்தை பல பகுதிகளாக பிரித்து வாசகர்களுக்கு ஏற்றவாறு அமைக்கலாம். இது எங்களின் வெகு நாள் சிந்தனை இருப்பினும் அதை பயன்படுத்தபோகிற உங்களின் கருத்தை ஆவலோடு எதிர்பார்கிறோம். எங்களுக்கு Forum பற்றி தெளிந்த அறிவும் அதனை பயன்படுத்தும் திறனும் மற்றும் ஏற்கனவே நடத்திய அனுபவமும் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பு: இது புதுவை.காம் மட்டும் பயன்படுத்தக்கூடிய சேவை அல்ல. இதில் அனைவரும் பங்கேற்று உங்களின் ஆக்கங்களையும், மற்றவர்களுக்கு உதவிகளையும் செய்யலாம். இது ஒரு போது சேவை. புதுவை.காம் வந்து பின் பாரதத்திற்கு செல்லவேண்டியதில்லை. இதற்கு தனி முகவரி ஒதுக்க முடிவெடுத்துள்ளேன்.

ஆகையால் கீழ் உள்ள ஓட்டளிப்பில் பங்கேற்று உங்களின் கருத்தை தெரிவிக்கவும். அதே போல நீங்கள் உங்களுடைய ஆலோசனைகளையும் பின்னோட்டத்தில் தெரிவிக்கலாம். உங்களுடைய ஆலோசனைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

புதுவை.காம் Forum ஆரம்பிக்கும் முயற்சிக்கு ஆதரவு தருகிறீர்களா?

View Results

Loading ... Loading ...

Popularity: 23%

போட்டோஷாப் ஷார்ட்கட் டேபிள்

வணக்கம், போட்டோஷாப் பயன்படுத்துபவர்களுக்கும் போட்டோஷாப்பினை இன்னும் சிறந்த முறையில் பயன்படுத்த நினைபவர்களுக்கும் இது ஒரு நல்ல படைப்பாக அமையும் என எண்ணுகிறேன். போட்டோஷாப்பின் டூல்களை பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட்களை இந்த கொப்பினில் காணலாம்.

Read more …

Popularity: 36%

Windows 7 “God Mode” ஐ உருவாக்குவது எப்படி?

God Mode என்பது எளிதில் அனைவருக்கும் தெரியாதபடி இருக்கும் சில மறைத்துவைக்கப்பட்ட  சேவைகளாகும். அது போல Windows 7 னிலும் God Mode இருக்கிறது. இதை உருவாக்குவதன் மூலம் உங்கள் கணினியில் உள்ள அனைத்து Administrative Setting குகளும் ஒரே போல்டரில் இருக்கும். இங்கிருந்தே நம் கணினியில் உள்ள அனைத்து செட்டிங்குகளையும் கையாள முடியும்.

கீழ் உள்ள வழி முறைகளை பின்பற்றவும்.

1. முதலில் ஒரு போல்டரை உருவாக்கவும்.

2. அந்த போல்டரை GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} என Rename செய்யவும்.

3.  இப்பொழுது உங்களுடைய போல்டருடைய ஐகான் மாறியிருப்பதை காணலாம். இப்பொழுது அந்த போல்டரை திறந்தால் உங்களுக்கான அனைத்து செட்டிங்குகளும் ஒரே இடத்தில் இருப்பதை காணலாம்.

இதற்கு நீங்கள் God Mode என்று தான் தர வேண்டும் என்கிற அவசியம் இல்லை. படைப்பு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

Popularity: 26%

docx கோப்புகளை ஓபன் செய்ய

இன்று பலர் Microsoft Office 2003 மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களால் Microsoft Office 2007 மென்பொருளில் சேமித்த word  document ஐ பார்க்க இயலாது. அவர்கள் 2007 இற்கு மாறினால் மட்டுமே அந்த கோப்பினை பார்க்க முடியும். ஆனால் இதனை சுலபமாக இந்த Doc X Viewer என்கிற இலவச மென்பொருள் மூலம் அணைத்து docx கோப்புகளை பார்க்கலாம். 
 
இதன் சிறப்பம்சம் இதனை இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. இதன் அளவு வெறும் 640 KB மட்டுமே. இதனை உங்கள் pen drive இல் எளிதாக எடுத்துச் செல்லலாம்.    
Blog Widget by LinkWithin

Popularity: 25%


பக்கம் 5 of 46« முதல்...34567102030...இறுதி »