Facebook வழியாக உங்கள் ப்ளாகின் traffic ஐ கூட்ட

உங்கள் தளத்தில் நீங்கள் என்ன தான் சிறந்த படைப்புகளை எழுதினாலும் அது மற்றவரின் பார்வைக்கு கொண்டு சென்றால் தான் உங்களுடைய தளத்திற்கு அதிக டிராபிக் வரும். இதை செய்து வரும் தமிழ் திரட்டிகளுக்கு கோடான கோடி நன்றிகள். இதில் முன்னணியில் தமிழிஷ் செயல்பட்டு வருகிறது.

பொதுவாக நம்முடைய வலைப்பக்கத்தின் டிராபிக்கை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. அதில் சில வழிமுறைகளை பின் வரும் பதிவுகளில் உங்களுடன் பகிர்கிறேன். இதில் சில வழிகள் பலருக்கு தெரிந்திருந்தும் அதை மற்றவருக்கு கற்பிப்பதில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. இது போன்ற வழிகளை மற்றவருக்கு சொல்வதினால் அவருக்கு எவ்விதத்திலும் பாதிப்பும் இல்லை.

Read more …

Popularity: 20%

வெப்சைட் URL ஷாட்கட்

வணக்கம், இது ஒரு சிறிய படைப்பாக இருந்தாலும் இந்த ஷாட்கட்கள் அனைவருக்கும் பயன்படும். பொதுவாக ஒரு இணையதளத்தை ஓபன் செய்ய அட்ரஸ் பாரில் www.pudhuvai.com என தட்டச்சு செய்து என்டர் பட்டனை பிரஸ் செய்தால் உங்களுக்கு அந்த இணையதளம் திறக்கும்.

ஷாட்கட் முறை 1

உங்கள் விசைபலகையில் உள்ள CTRL + ENTER பட்டங்களை ஒரே நேரத்தில் பிரஸ் செய்வதின் மூலம் உங்களுடைய தளத்தை www. மற்றும் .com இவைகளை தட்டச்சு செய்யாமலேயே திறக்கலாம். உங்களுடைய அட்ரஸ் பாரில் உங்களுடைய இணையதளத்தின் பெயரை மட்டும் (உதாரணமாக pudhuvai) தட்டச்சு செய்து Ctrl + Enter ஐ ஒருசேர அழுத்தினால் உங்களுக்கு www.pudhuvai.com என அட்ரஸ் பாரில் முகவரி தோன்றி அந்த தளம் திறக்கும்.

ஷாட்கட் முறை 2

இது firefox இல் மட்டுமே வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. .com ஐ போல .net என முடியும் இணையதளத்தை திறக்க Shift + Enter என கொடுத்தால் www.yoursitename.net என திறக்கும். அதே போல .org என முடியும் இணையதளத்தை திறக்க Ctrl + Shift + Enter இந்த மூன்று பட்டன்களையும் ஒன்றாக அழுத்தினால் .org என முடியும் தளம் திறக்கும்.

அட்ரஸ் பாரில் இணையதளத்தின் பெயரை தட்டச்சு செய்து Alt + Enter கொடுத்தால் உங்களுடைய இணையதளம் புதிய டேபில் திறக்கும்.

Popularity: 38%

Virtual Discs உருவாக்குவது எப்படி?

இந்த Virtual Disk தொழில்நுட்பம் நாம் பயன்படுத்தும் குறுந்தகடையும்(CD) அதை படிக்க பயன்படும் டிரைவினையும் பயன்படுத்துவதை வெகுவாக குறைகிறது. பொதுவாக அனைத்து கணினிகளிலும் ஒரே ஒரு CD Drive மட்டுமே பொருத்தப்பட்டிருக்கும். நம்மிடம் இருக்கும் பல குறுந்தகடுகளை பார்க்க ஒன்றின் பின் ஒன்றாக மட்டுமே மாற்றி மாற்றி பார்க்க முடியும். அதே போல சில மென்பொருள்களை /கேம்களை இயக்க கட்டாயம் அந்த குறுந்தகடு அந்த கணினியில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இது போன்ற தருணங்களில் குறுந்தகட்டின் பயன்பாடு அதிகம் தேவைபடுகிறது.

இதனை தவிர்க்கும் விதமாக குறுந்தகடு இல்லாமலேயே அதனுள் இருக்கும் தகவல்களை நாம் பயன்படுத்தலாம். புரியவில்லையா? முதலில் உங்கள் CD Burning மென்பொருள் கொண்டு நீங்கள் பயன்படுத்த விரும்பும் குறுந்தகட்டினை அப்படியே image file (iso file) ஆக உங்கள் கணினியில் சேமிக்கவும். இது உங்களுடைய குருந்தகடினுடைய கோப்புகளை அப்படியே ஒரே இமேஜ் கோப்பாக சேமிக்கும். இந்த கோப்பினை வைத்து நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நகலேடுத்துக்கொள்ளலாம்.

சரி உங்களுடைய குறுந்தகட்டினை image file ஆக செமித்துவிட்டீர்களா, அடுத்து இந்த சுட்டியை கிளிக் செய்து  Daemon Tools Lite என்கிற இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவவும். நிறுவும் பொழுது Free User என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பின் மறக்காமல் உங்கள் கணினியை Restart செய்யவும். இப்பொழுது உங்களுடைய My Computer ஐ ஓபன் செய்து பார்த்தால் உங்களுக்கு ஒரு புதிய Virtual CD/DVD Drive உருவாகியிருக்கும்.

இப்பொழுது நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் image file ஐ இந்த டிரைவில் இணைக்கப்போகிறோம்.

உங்களுடைய System Notification Bar இல் உள்ள Daemon Tools ஐகானை வலது கிளிக் செய்து Virtual Devices என்கிற லின்கின் மேல் மவுஸை கொண்டுசென்றால் உங்களுடைய  Virtual drive தெரியும். அதில் உள்ள Mount Image என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய image file ஐ தேர்வு செய்யவும்.

இனி உங்களுடைய கணினியில் உள்ள virtual drive இல் இந்த இமேஜ் கோப்பினுள் உள்ள தகவல்கள் அனைத்தும் தெரியும்.

மீண்டும் அந்த Image ஐ மாற்றியமைக்க அதே மேனுவிற்கு சென்று Unmount Image என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி.

Popularity: 25%

மென்பொருளுக்கு விரும்பிய பெயரில் ஷாட்கட் வைக்க

வணக்கம், நம் கணினியில் உள்ள அப்ளிகேஷன்களை விரைவாக திறப்பதற்கு விண்டோஸில் உள்ள ஷாட்கட்டை பயன்படுத்துவோம். இது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. நாம் பயன்படுத்தும் விண்டோஸில் நமக்கு தேவையான மென்பொருளுக்கு நாம் விரும்பிய பெயரில் ஷாட்கட் வைக்கலாம் என்பது பலருக்கு தெரியாது. இது மென்பொருள் மட்டுமின்றி நீங்கள் அடிக்கடி திறக்கும் போல்டருக்கு கூட நீங்கள் விரும்பிய ஷாட்கட் அமைக்கலாம்.

அந்தப் பெயரை Run dialog box ஐ திறந்து நீங்கள் செட் செய்த ஷாட்கட்டை டைப் செய்து என்டர் கொடுத்தால் உடனே அந்த மென்பொருளோ அல்லது போல்டரோ திறக்கும். இதனை செய்ய பலர் அவர்களுடைய Windows Registry ஐ கையாள்வார்கள். ஆனால் அதைவிட சுலபமாக இந்த ஷாட்கைட்டை உருவாக்கலாம்.

முதலில் ஷாட்கட் அமைக்க விரும்பும் மென்பொருளோ அல்லது போல்டரோ இருக்கும் இருக்கும் இடத்திற்கு செல்லவும். உதாரணமாக நான் Opera மென்பொருளுக்கு pudhuvai என்கிற ஷாட்கட்டை வைக்கப்போகிறேன். C:\Program Files\Opera 10.50 Beta இது தான் என்னுடைய கணினியில் Opera இருக்கும் இடம்.

அடுத்து இதில் இருக்கும் .exe என்ற கோப்பை காபி செய்யவும். எனக்கு opera.exe என்ற கோப்பை நான் காபி செய்யவேண்டும். அதேபோல உங்களுடைய மென்பொருளுக்கான exe கோப்பினை காபி செய்து கொள்ளுங்கள்.

அடுத்து Run mode ற்கு சென்று %systemroot% என தட்டச்சு செய்து என்டர் கொடுக்கவும்.

இது உங்களுடைய விண்டோஸ் இயங்குதளம் இருக்கும் போல்டரை உங்களுக்கு காண்பிக்கும். இந்த இடத்தில் வலது கிளிக் செய்து paste கொடுக்காமல் Paste as shorcut கொடுக்கவும்.

பின் அந்த கோப்பினை Rename செய்து உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கவும்.

அவ்வளவுதான் இனி Run விண்டோவை திறந்து நீங்கள் கொடுத்த பெயரினை தட்டச்சு செய்து என்டர் கொடுத்தால் அந்த மென்பொருள் திறப்பதை காணலாம்.

படைப்பு பிடித்திருக்கும் என நினைக்கிறேன். நன்றி.

Blog Widget by LinkWithin

Popularity: 17%


பக்கம் 4 of 46« முதல்...23456102030...இறுதி »