உங்களது இணையதளத்தின் “RSS Feed” ஐ “Gadget” ஆக இணைப்பது எப்படி? (Vista/Windows7)
நீங்கள் விண்டோஸ் விஸ்டா தொகுப்பு உபயோகிப்பவராக இருப்பின் “Gadget” கள் “side bar” இல் இருக்கும் அல்லவா? அதில் உங்களது வலைப்பக்கமோ அல்லது இணையதளத்தையோ “RSS” ஆக இணைக்க விருப்பப்படுபவரா நீங்கள்? இதோ கட்டுரையை தொடருங்கள். முதலில் “Vista side bar” இல் “gadget”இல் “add new gadget” என்பதை தேர்வு செய்யவும்.

பின்னர் “RSS Flux” என்பதை உங்களது “Sidebar” இல் “Gadget” ஆக இணைத்துக்கொள்ளவும்.

இனி, நீங்கள் இணைக்கவிரும்பும் வலைப்பக்கத்திற்கோ அல்லது இணைய தளத்திற்கோ செல்லவும்.
குறிப்பு: “Internet Explorer” ஐ பயன்படுத்தி செல்லவும்.
பின்னர் உங்கள் இணையதளத்தின் “RSS Icon” ஐ அழுத்தவும்.

இது உங்களின் “RSS” இணையபக்கத்திற்கு அழைத்து செல்லும் சான்றாக “www.feedburner.com” . பின்னர் “Subscribe this page” என்பதனை தேர்வு செய்யவும்.
இனி தோன்றும் விண்டோவில் உங்களது இணையத்தின் பெயரானது இருக்கும். தேர்வு செய்து ok செய்யவும்.
இனி, விஸ்டா “gadget” க்கு சென்று “RSS gadget” இன் செட்டிங்கை கிளிக்செய்து அதில் கீழே நான் தேர்வு செய்துள்ளபடி செட்டிங் செய்துகொள்ளவும்.

அவ்வளவுதான் உங்களது இணைய தளத்தின் அல்லது வலைபக்கத்தின் “RSS Flux” ஆனது “Vista sidebar” இல் தோன்றுவதை காணலாம்.
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
Popularity: 10%









