Photoshop இல் எளிய முறையில் புகைப்படங்களுக்கு Watermark

இன்று பதிவுலகில் பலரும் பல பயனுள்ள தகவல்களை பதிவிடுகின்றனர். அதை மற்ற நண்பர்கள் மிக எளிதாக காபி செய்து அவர்களுடைய வலைபக்கத்தில் அவர்களே பதிவிட்டது போல வெளியிடுகின்றனர்.  அதில் அவர்கள் படைப்பின் உரிமையாளரின் பெயரை பதிவிட்டால் கூட பரவாயில்லை. அனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நேரத்தை ஒதுக்கி ஒருவர் வெளியிடும்  படைப்புக்கு கிடைத்த பின்னோட்டங்கள், ஓட்டுகளை விட அதிகபடியான பின்னோட்டங்கள் மற்றும் ஓட்டுகள் அந்த படைப்பை காபி செய்து பதிவிட்டவருக்கு கிடைகிறது. என்ன கொடுமை சார் இது என்று பாதிக்கப்பட்டோரின் கவலைக் குரல் எனக்கு புரிகிறது. அவர்களுக்கு இந்த படைப்பு உதவியாய் இருக்கும் என் நம்புகிறேன்.

Read more …

Popularity: 100%

Nero .nrg கோப்புகளை .iso கோப்பாக மாற்றுவது எப்படி?

CD Burning/Writing ற்கு இன்று பலரும் உபயோகிக்கும் மென்பொருள் Nero Burning Rom இதில் நீங்கள் உங்களுடைய குறுந்தகடில் உள்ள தகவல்களை உங்களுடைய கணினிக்கு image file ஆக நகலேடுக்கலாம். இந்த image பைலின் extension .nrg என இருக்கும். இது nero மென்பொருளின் கோப்பின் extension ஆகும்.

இந்த கோப்பினை nero மென்பொருள் இருந்தால் மட்டுமே இதை நீங்கள் புதிய குறுந்தகடில் பதிய முடியும். இந்த கோப்பினை உங்களுடைய நண்பருக்கு கொடுத்தால் அவர் கணினியில் nero மென்பொருள் இருந்தால் மட்டுமே இந்த கோப்பினை அவர் CD யில் பதிய முடியும்.  இதர சில Disc Writing மென்பொருட்கள் மட்டுமே .nrg கோப்புகளையும் கையாள்கிறது.

இது போன்ற தருணங்களில் Nero மென்பொருள் இல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் Disc Writing மேன்போருளிலேயே பதிய இந்த சிறிய டூலை பயன்படுத்தி உங்களுடைய .nrg கோப்பை .iso கோப்பாக மாற்றினால் போதுமானது. .iso கோப்பினை அனைத்து Disc Writing மென்பொருட்களும் கையாளும்.

இந்த nrg2iso லிங்கை கிளிக் செய்து இந்த டூலை பதிவிறக்கிக் கொள்ளவும். இதனை நிறுவியபின் இதில் உள்ள exe கோப்பை இயக்கினால் உங்களுக்கு படத்தில் உள்ளவாறு ஒரு சிறிய விண்டோ தோன்றும்.

nrg to iso converter

இதில் உள்ள Browse பட்டனை கிளிக் செய்து உங்களுடைய .nrg கோப்பை தேர்வு செய்யவும். அடுத்து Convert என்கிற பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய .nrg கோப்பை .iso கோப்பாக சிறிது நிமிடத்தில் மாற்றிவிடும்.

nrg2iso converter

குறிப்பு: உங்களுடைய .nrg கோப்பும் அப்படியே இருக்கும்.

Popularity: 81%

MS Excel இல் Rank function ஐ பயன்படுத்துவது எப்படி?

நாம் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் மென்பொருள் MS Office தொகுப்பாகும். இதில் உள்ள எக்ஸல் மென்பொருளில் Rank function ஐ எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

முதலில் ஒரு எக்ஸல் ஷீட்டில் ஒரு அட்டவணையை பூர்த்தி செய்து கொள்ளவும். Rank function ஒரு வரிசையில் உள்ள எண்களில் எது பெரியது மற்றும் எது சிறியது என காட்ட உதவுகிறது. இந்த சூத்திரத்தை(formula) வைத்து ஒரு வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் வரிசையை அறியலாம், அலுவலகத்தில் அதிக சம்பளம் மற்றும் விற்பனையில் அதிகம் விற்பனை செய்தவரின் தகவல்களை வரிசைபடுத்தலாம்.

முதலில் சூத்திரத்தை காண்போம்:

= RANK ( Number, Ref, [Order] )

Number

- இதில் ஒரு எண்ணையோ அல்லது எண் அடங்கிய ஒரு செல்லின் முகவரியையோ கொடுக்கலாம். கண்டிப்பாக எண்ணாக இருத்தல் வேண்டும்.

Ref

- இது ஒட்டுமொத்த மதிப்புகள் அடங்கியுள்ள செல்களின் reference ஐ கொடுக்கவேண்டும். இதில் அடங்கியுள்ள எண்களை தான் நாம் வரிசைபடுத்தப் போகிறோம்.

Order

- இதில் 0(Descending) என கொடுத்தால் அதிகமான மதிப்பை முதல் ரேங்காகவும், 1(Ascending) என கொடுத்தால் குறைவான மதிப்பை முதல் ரேங்காகவும் மதிப்பிடும். இந்த பிரிவு optional ஆகும். அதாவது இதற்கு மதிப்பு கொடுக்காவிட்டாலும் தானாகவே 0(Descending) என எடுத்துக்கொள்ளும்.

கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்

rank function in excel

இதில் H ரோவில் மொத்த மதிப்பெண்களையும் I ரோவில் அவற்றிற்கான ரேங்கும் இருக்கிறது. முதலில் நான் H2 என்கிற  செல்லில் =rank( என அடித்து H2 என கொடுத்துள்ளேன் இங்கு 301 என்கிற எண்ணை அது குறிக்கிறது. அடுத்து ,(comma) வைத்து அடுத்த Ref மதிப்பில் H2 விலிருந்து H9 வரை செலக்ட் செய்துள்ளேன்.

இங்கு நீங்கள் நான் கொடுத்துள்ள சூத்திரத்தில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் H2 மற்றும் H9 இவற்றிற்கு நடுவில் $ ஐ கொடுத்துள்ளேன். இது நீங்கள் மற்ற செல்களுக்கு ரேங்கை பயன்படுத்தும்போது நாம் ஒவ்வொரு செல்லிற்கும் சூத்திரத்தை தட்டச்சு செய்யமாட்டோம் மாறாக முதல் செல்லில் தட்டச்சு செய்து பின் அதன் வலது மூலையில் உள்ள + குறியை மவுஸினால் டிராக் செய்து நமக்கு தேவையான செல் வரை இழுத்துக்கொண்டு வந்து விடுவோம். அப்படி செய்யும் பொழுது ஒவ்வொரு செல்லிர்க்கும் உள்ள reference இன் மதிப்பு மாறுபடும். இதை நீங்கள்($) டாலர் குறியை பயன்படுத்தாத போது இதன் அவசியம் உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும்.

இறுதியாக உங்களுடைய ரேங்கின் மதிப்பு Ascending அல்லது Descending ஆக தரவேண்டும். உதாரணமாக இந்த அட்டவணையில் Order 0 என கொடுத்தால்  409 மதிப்பு பெற்ற Prem இன் ரேங் 1 என வரும். Order 1 என கொடுத்தால் 298 மதிப்பு பெற்ற Arun இன் ரேங் 1 என வரும்.

இந்த லிங்கை கிளிக் செய்து இந்த எக்ஸல் கோப்பினை பதிவிறக்கிக் கொள்ளவும்.

இன்னும் ஏதாவது விளக்கம் தேவைபட்டால் க்ருத்துரையிடவும்.

Popularity: 82%

போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு

போடோஷாபில் ஒரே மாதிரியான டிசைனை பல வழிகளில் பயன்படுத்தலாம். அது போலவே இன்று நாம் பார்க்கப்போகும் டிசைனையும் நாம் இன்னும் சில வழிகளில் உருவாக்கலாம். அனால் என்னை பொருத்தவரை இதுவே சிறந்த முறையாகும் அதை விட இதை செய்வதும் மிகவும் சுலபம்.

Clipping Mask என்பது ஒரு லேயரில் உள்ள ஆப்ஜக்டின் உருவ அமைப்பை பொறுத்து அதை தவிர்த்து மீதமுள்ள இடங்களை மறைக்க உதவுகிறது. உதாரணமாக உங்களுடைய பெயரை தட்டச்சு செய்து அதை ஒரு புகைபடத்தினுள் வைத்து புகைப்படத்தின் பிற பகுதிகளை மறைக்கலாம். இதனால் அந்த புகைப்படம் உங்களுடைய பெயரின் பின்புலத்தில் மட்டும் தெரியும். உதாரணமாக கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
Pudhuvai Layer Mask

Read more …

Blog Widget by LinkWithin

Popularity: 59%


பக்கம் 3 of 4612345102030...இறுதி »