இணையதள வளர்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் கூளில் சேவைகளில் மகத்தான ஒரு சேவை Google public DNSஆகும்.
Public DNS சேவை என்றால் என்ன?
பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம்.
எடுத்துக்காட்டு: BSNL,AIRTEL,TATA INDICOM இன்ன பிற…இவர்களைத்தான் Internet Service Provider (ISP)என அழைக்கின்றோம்.
நாம் பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை இணைய உலாவியில் தட்டச்சு செய்து என்டர் செய்தவுடன் அந்த குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) செர்வருக்கு சென்று பின்னர் அதன் மூலமாக நீங்கள் தட்டச்சு செய்த இணையத்தை தேடிப்பிடித்து உங்களது இணைய உலாவியில் அப்பக்கத்தை திறக்க செய்கின்றது. இந்த சேவையை செய்வதே DNS ஆகும். இது அனைத்து இணையசேவை வழங்கும் நிருவனத்தினரும் தங்களுக்கென்று ஒரு Public DNS severஐ வைத்திருப்பார்கள். ஆனால் Google Public DNS இலவச சேவையை பயன்படுத்தினால் இணைய வேகத்தை அதிகரிப்பதுடன் இணையத்தில் கூடுதல் பாதுகாப்பையும் அளிக்கின்றது.
இந்த சேவையை உங்களது கணினியில் Confugure செய்வது மிகவும் எளிமையான ஒன்று. உங்களது கணினியில் Control Panel செல்லவும், பின்னர் Network Connections என்பதை அழுத்தவும்.

பின்னர் உங்களது நெட்வொர்க் டிவைஸின் மீது வலது கிளிக் செய்து Properties ஐ அழுத்தவும்.


இப்போது தோன்றும் விண்டோவில் Internet Protocol(TCP/IP)என்பதை தேர்வு செய்து பின்னர் Properties ஐ அழுத்தவும்.பின்னர் Use the following DNS Server Addresses என்பதை டிக் செய்து Preferred DNS Server என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4 எனவும் தட்டச்சு செய்து செய்யவும்.

இப்போது கணினியை restart செய்து இணைய இணைப்பை ஏற்படுத்தவும். இப்போது இணையதளங்களை சோதித்துப்பாருங்கள். கூடுதல் வேகம் மற்றும் பாதுகாப்பும் உங்களது கணினிக்கு கிடைக்கும்.
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
Popularity: 69%
நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை இணைய உலவியாக உபயோகிப்பவராக இருந்தால், சில (ஆங்கில)இணையதளங்களை பார்வையிடுகையில் சில (ஆங்கில)வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் இருக்கும் அல்லவா? அவ்வாறு குழப்பம் ஏற்படுகையில் நாம் அந்த வார்த்தைகளுக்கு Google Define சேவையை பயன்படுத்தி அர்த்தம் புரிந்துகொள்ளலாம். இந்த Google Defineசேவையை நீங்கள் Add-onஆக பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்க்கு நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 ஐ பயன்படுத்தவேண்டும்.
முதலில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை இயக்கி பின்னர் tools>Manage addons என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் Find more toolbars and extensions என்பதை அழுத்தவும்.

பின்னர் தோன்றும் விண்டோவில் இருக்கும் search box இல் google என தட்டச்சு செய்து பின்னர் என்டர் செய்யவும்.

இப்போது தோன்றும் கூகுள் services களில் google define என்பதை தேர்ந்தெடுத்து add to internet explorer என்பதை அழுத்தவும்.

இனி நீங்கள் பார்வையிடும் இணையதளங்களில் காணப்படும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவையெனில் அந்த வார்த்தையை செலெக்ட் செய்து மவுஸால் வலது கிளிக் செய்து பின்னர் all accelerators என்பதை தேர்ந்தெடுத்து பின்னர் define with google என்பதை அழுத்தவும்.

அவ்வளவுதான் நீங்கள் தேர்வுசெய்த வார்த்தைக்கான அர்த்தத்தை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்து கருத்துரையிடவும்.
Popularity: 14%
இன்று நம்மிடையே டிஜிட்டல் புகைப்படக்கருவிகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. வண்ண பிரிண்டர்களின் பயன்பாட்டால் நாம் நமது கேமராக்களில் எடுக்கும் புகைப்படத்தை நம்முடைய பிரிண்டர் மூலமாகவே இன்று அச்சடித்துக்கொள்ளமுடியும். ஆனால் அச்சடிக்கும் படமானது தரமானதாக இருக்கவேண்டாமா? அவ்வாறு தரமானதாக அச்சடிக்க கூகிள் பிக்காஸாவில் வழி இருக்கின்றது.
முதலில் கூகிள் பிக்காஸாவை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின்னர் கூகிள் பிக்காஸாவை இயக்கவும். அதில் Tools சென்று பின்னர் Optionsஐ அழுத்தவும்.

கடைசியில் Printingஎன்பதை அழுத்தி High Qualityஎன்பதை தேர்வுசெய்துகொள்ளவும்.

அவ்வளவுதான் இனி நீங்கள் அச்சடிக்க விரும்பும் புகைப்படத்தை திறந்துகொண்டு பிரிண்ட் செய்திடுகையில் உங்களது படமானது துல்லியமாக அச்சடிக்கப்பட்டிருக்கும்.
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் கருத்துக்கூறி வாக்களிக்கவும்.
Popularity: 16%
பொதுவாக கணிதம் தொடர்பான சூழலில் பணிபுரிபவர்கள் அடிக்கடி equationஐ பயன்படுத்துவதுண்டு. சான்றாக கணக்கு ஆசிரியராக பணிபுரிபவர்கள் மாணவர்களுக்கான வினா தாள்களை தயார் செய்கையில் equation ஐ தட்டச்சு செய்வதில் சிரமம் இருப்பதாக எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் எம்.எஸ் வேர்ட்2007 இல் linear option இல் எளிதாக equationஐ உருவாக்கலாமே என்று நாங்கள் பதில் விளக்கம் அளித்திருந்தோம். ஆனால் அவர்கள் linearஅல்லாமல் சாதாரண தட்டச்சுலேயே உருவாக்க இயலுமா என கேட்டனர். இதோ அவர்களுக்கான எளிமையான விளக்கம்.
முதலில் நீங்கள் உருவாக்க இருக்கும் equation ஐ முறையாக தட்டச்சு செய்துகொள்ளவும்.
இங்கு நாங்கள் கீழ்கண்ட equation ஐ உருவாக்க இருக்கிறோம்.
இதற்க்கு முதலில் equation ஐ நீங்கள் கொண்டுவரவேண்டும் அல்லவா அதற்க்கு வேர்டில் இருக்கும் insert menuவில் இருக்கும் symbolsஐ கிளிக் செய்யவும் பின்னர் அதில் இருக்கும் more symbols ஐஅழுத்தி
root ஐ இன்சர்ட் செய்யவும்.
பின்னர் பாக்கியுள்ள equation ஐ தட்டச்சு செய்துகொள்ளவும்.
+ என்பது கூட்டல்,-என்பது கழித்தல்,*என்பது பெருக்கல்,/என்பது வகுத்தல்,^என்பது squareஆகும்.
அப்படியானால் நீங்கள் தட்டச்சு செய்வது கீழ்கண்ட வகையில் இருக்கவேண்டும்.
√((a^2+b^2)/(c^2))
தட்டச்சு முடிந்தபின்னர் equation ஐ செலெக்ட்செய்து கொள்ளவும். செலெக்ட் ஆனவுடன் தட்டச்சு பலகையில்ALTஐ பிடித்துக்கொண்டு = ஐ அழுத்தவும். இப்போது தோன்றும் சிறிய அம்புக்குறியில் கிளிக் செய்து professional என்பதை அழுத்தவும்.
அவ்வளவுதான் இப்போது நீங்கள் தட்டச்சு செய்த equationஆனது கணக்கு equation ஆக மாறியிருக்கும்.
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்து கருத்துசொல்லவும்.

Popularity: 18%