phishingஆல் பாதிக்கப்பட்ட paypalதளம்

4 comments 21 April 2010 Under: வெப்

புதுவை.காம் வாசகர்களுக்கு வணக்கம் எங்களின் இணையதளத்தில் சில‌ மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருவதால் இணையதளம் சிலவேலைகளில் திறக்காமல் போகலாம். அதற்காக வருந்துகிறோம். கூடியவிரைவில் பணியினை செய்துமுடிக்கவும் முயற்சிக்கின்றோம்.

இன்றைய பதிவில் Paypal phishing  இல் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்க்கான வழிமுறைகளை படைக்கிறோம்.

பொதுவாக paypal என்பது ஆன்லைனில் பணம் செலுத்தும் ஒரு சேவையாகும். உங்களது கிரெடிட் கார்டு மூலமாக இணையத்தில் பணம் செலுத்தும் ஒரு சேவையை இவர்கள் அளிக்கிறார்கள். ஆனால் இந்த இணையதளமும் சமீபத்தில் phishing ஆல் பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது paypalலிலிருந்து உங்க‌ளுக்கு மின்னஞ்சல் வந்திருப்பதை போலவும் அதில் உங்களது கணக்கை யாரோ தவறாக பயன்படுத்தியிருப்பதாகவும் அதனை சரி செய்ய இங்கே கிளிக் செய்யவும் என கூறி ஒரு லிங்கையும் அளித்திருப்பார்கள். இதுபோல ஏதாவது மின்னஞ்சல் உங்களுக்கு வந்தால் அது phishing mail ஆக இருக்கலாம்.

அல்லது உங்களின் ஆன்லைன் paymentடினை உறுதிசெய்துகொள்ளும்படியான ஒரு போலி மின்னஞ்சலை அளித்திருப்பார்கள்.

நம்மில் பலரும் இந்த சேவையை இணையத்தில் பயன்படுத்துவதால் இக்கட்டுரை பலருக்கு பயன்படும் என நம்புகிறோம்.  paypal phishing கிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை பின்படுத்துங்கள். இம்முறை ஆன்லைன் banking க்கும் பொருந்தும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

1. paypal க்கு எக்காரணத்தை கொண்டும் உங்களுக்கு வந்த மின்னஞ்சல் மூலமாக கிளிக் செய்து நுழையவேண்டாம்.
2. paypal  என்றுமே உங்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை மின்னஜ்சலில் கேட்காது என்பதை கவனத்தில் கொள்க.
3. உங்களுக்கு paypalலிலிருந்து சந்தேகம்படும்படியான மின்னஞ்சல் வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம்.
4. அப்படிபட்ட மின்னஞ்சலை உடனடியாக spoof@paypal.com என்ற முகவரிக்கு forward செய்துவிடவும்.
5. இணையதளத்திற்கு உங்களது வெப் பிரவுசரில் https:// www.paypal.com என தட்டச்சு செய்தே நுழையவும்.
6.தளத்திற்க்குள் நுழைந்தவுடன் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுக்கும் முன்னர் அது உண்மையான தளம் தானா என சோதித்துக்கொள்ளவும்.

மேற்கண்டவாறு முன்னெச்சரிக்கையாக உங்களது கணக்கை paypal phishing கிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும்.

குறிப்பு: உங்களது கணினியை உங்களைத்தவிர பிறரும் பயன்படுத்துவதாக இருந்தால் paypal மற்றும் வங்கிகணக்கு எண்கள் போன்றவற்றை கணினியிலும் இணைய உலவியிலும் சேமித்துவைக்காதீர்கள்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

Popularity: 15%

பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்ய‌

4 comments 16 April 2010 Under: வெப்

Youtube ல் நமக்கு தேவையான பல வீடியோக்கள் கிடைக்கின்றன. திரைப்படபாடல்கள், தொலைகாட்சி நிகழ்சிகள் இன்னபிற. அதேபோல ஒருசிலர் youtube  சேனல் வைத்திருப்பார்கள் அதில் பலவீடியோக்களை வைத்திருப்பார்கள். அதை அப்படியே பதிவிறக்கம் செய்யவேண்டுமானாலும் அல்லது உங்களுக்கு விருப்பமான பல வீடியோக்களை ஒரேநேரத்தில் பதிவிறக்கம் செய்யவேண்டுமெனில் பயர்பாக்ஸில் வழி இருக்கிறது.

ஒரேஒரு  நீட்சியை நிறுவினாலே போதுமானது. இது பல இணையதளங்களில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோக்களை பதிவிறக்கம் செய்துதரும். இதன் பெயர் Video Download Helper ஆகும். முதலில் இங்கு சொடுக்கி இதனை பதிவிறக்கம் செய்துகொண்டு பயர்பாக்ஸில் நிறுவிக்கொள்ளவும். பின்னர் பயர்பாக்ஸை திறந்து Youtube தளத்திற்க்கு சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய Channel ஐ திறக்கவும்.


பின்னர் உங்களுக்கு தேவையான வீடியோக்களை மவுஸால் செலெக்ட் செய்யவும். பின்னர் ரைட் கிளிக் செய்து “Download Videos from Youtube Links”என்பதை அழுத்தவும்.

அவ்வளவுதான் இனி ஒவ்வொரு வீடியோவாக பதிவிறக்கம் செய்யப்படும். Youtube பக்கத்தைகூட நீங்கள் மூடிவிடலாம் பதிவிறக்கம் தானாக நடக்கும்

குறிப்பு: பலவீடியோக்கள் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வீடியோவையும் மற்றும் பாடல்களையும் இந்த Download Helper துணைக்கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  இதற்கு முதலில் உங்களது வீடியோ அல்லது ஆடியோவை பிளே செய்துவிட்டு பின்னர் Browser இல் இருக்கும் Download Helper ஐகானை அழுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் கருத்துரையிட்டு வாக்களிக்கவும்.

Popularity: 27%

போட்டோஷாப்:Backlight எக்ஸ்போஷரை சரி செய்யும் நுட்பம்.

இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

பொதுவாக நம்மில் பலரும் புகைப்படகலைஞர்கள் கிடையாது. ஏதோ கையில் இருக்கும் கேமராவிலோ அல்லது செல்போனிலோ படங்களை கிளிக் செய்துவிடுவோம். அவ்வாறு கிளிக் செய்திடுகையில் உருவத்திற்கு பின்னால் வெளிச்சம் அதிகமாக இருப்பின் படத்தில் இருப்பவரின் முகமானது தெளிவில்லாமல் காணப்படும். ப‌டம் எடுக்கும் போது கேமராவின் பின்புறம் சூரிய வெளிச்சம் இருந்தால் படம் நன்றாக வரும் மாறாக கேமராவின் லென்ஸ் முன்னே சூரிய வெளிச்சம் இருப்பின் படம் underexposure ஆகிவிடும். கீழே இருக்கும் படத்தை பாருங்கள். இது காலை நேரத்தில் புதுச்சேரியின் கடற்கரையில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை பாருங்கள் படத்தில் இருக்கும் இருவரின் முகமும் கருப்பாக இருப்பதை பாருங்கள்.

Pandian,Mohanakrishnan

இதுபோல படங்கள் underexposure என்று அழைக்கப்படும். சரி போட்டோஷாப்பில் இதுபோன்ற படத்தை எவ்வாறு  சரி செய்வது என பார்க்கலாம்.

இதனை இரண்டு வகைகளில் செய்யலாம். முதல் வகை மிக மிக சுலபம் இது உங்களது புகைப்படத்தை பொருத்தது. இதில் நல்ல ரிசல்ட் கிடைத்தால் நீங்கள் முதல் முறையை கையாளலாம். இல்லையேல் இரண்டாவது முறையை பின்பற்றுங்கள்.

முதல் முறை:

படத்தை போட்டோஷாப்பில் திறக்கவும். பின்னர் விசைபலகையில் CTRLமற்றும் Jஐ அழுத்தவும் இப்போது உங்களது படம் டூப்ளிகேட் செய்யப்பட்டிருக்கும்.

இந்த டூப்ளிகேட் செய்யப்பட்ட லேயரின் Blend mode ஐ  screen க்கு மாற்றவும்.

அவ்வளவுதான் இப்போது உங்களது படத்தில் நல்ல வெளிச்சம் கிடைத்திருக்கும். இதில் நீங்கள் திருப்தி அடைந்தால் அப்படியே சேவ் செய்துகொள்ளவும். இந்த முறையில் சோதிக்கப்பட்ட இப்படம் எனக்கு கைகொடுக்கவில்லை காரணம் படத்தில் முகம் தெளிவாக இருந்தாலும் பின்புறம் அதிகபடியான வெளிச்சம் இருப்பதை பாருங்கள். இதனால் எனக்கு வானம் மற்றும் மேகம் அதிக வெளிச்சத்துடன் இருப்பதை பாருங்கள்.

Pandian,Mohanakrishnan

இரண்டாவது முறை:
படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். பின்னர் Image>Duplicate செய்யவும்.


பின்னர் Ok செய்யவும்.

இப்போது Image>Mode>Grayscale ஐ தேர்வு செய்யுங்கள்.


Discard என்பதை அழுத்தவும். உங்களது படம் இப்போது கருப்பு வெள்ளையாக மாறியிருக்கும்.

இனி, Filter>Blur>Gaussian Blur செல்லவும் அதன் மதிப்பை 4 லிருந்து 6 க்குள் தந்து ok செய்யவும்.


இப்போது உங்களது Orginal படத்தை தேர்வுசெய்யவும் (கலர்)

Select>Load Selection அழுத்தவும்.


இப்போது தோன்றும் விண்டோவில் Invert என்பதை டிக் செய்து ok செய்யவும். இப்போது உங்களது உருவம் மட்டும் செலெக்ட் செய்யப்பட்டிருக்கும்.

இனி Edit>Fill அழுத்தவும்.


Use என்பதில் 50% gray வை தேர்ந்தெடுத்து Blending Mode ஐ Color Dodge க்கு மாற்றி ok செய்யுங்கள்.

இப்போது உங்களது படத்தில் இருக்கும் உருவம் தெளிவாக இருப்பதை பாருங்கள் அதே நேரத்தில் படத்தில் இருக்கும் பின்னனியும் தெளிவாக இருப்பதை பாருங்கள். இப்போது விசைபலகையில் CTRL+J ஐ அழுத்தவும். உங்களது உருவம் மட்டும் தனி லேயராக இருக்கும். இனி இந்த லேயரின் Blend Mode ஐ Screen க்கு மாற்றவும்.

அவ்வளவுதான் இப்போது கிடத்த ரிசல்டை பாருங்கள்.

Orginal Photo:

After Work:

இந்த கட்டுரை பலருக்கும் பயன்படும் என நினைக்கிறேன். எனவே மறக்காமல் கருத்துரை இட்டு வாக்களிக்கவும்.

Popularity: 21%

டுவிட்டர் கணக்கை ஜிமெயிலில் இணைப்பது எப்படி?

4 comments 13 April 2010 Under: வெப்

டுவிட்டர் மற்றும் பேஸ்புக் இன்று நம் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கணக்குகளை நம்முடைய ஜிமெயில் கணக்கின் உள்ளே ஒரு Gadget ஆக இணைத்து பார்த்துக்கொள்ளலாம்.

முதலில் ஜிமெயிலை திறந்து உங்களது கணக்கில் நுழையவும். பின்னர் settings ஐ அழுத்தவும்.

பின்னர் Labs என்பதை அழுத்தவும்.

அடுத்ததாக  Add any gadget by URL என்ற சேவையை Enable செய்யவும்.

பின்னர் கீழே சென்று Save changes என்பதை அழுத்தி Save செய்துகொள்ளவும். இப்போது உங்களது ஜிமெயில் ஒருமுறை refresh ஆகும்.

பின்னர் gadget என்பதை அழுத்தவும். இப்போது add a gadgets by its URL என்பதில் நான் கொடுத்துள்ள இந்த லிங்க்கை அப்படியே காப்பி பேஸ்ட் செய்யவும்.

( இங்கே சொடுக்கி பின்னர் அந்த பக்கத்தில் இருக்கும் URL ஐ மட்டும் அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். எங்களது இணையதளத்தில் காப்பி செய்வதை தடை செய்துள்ளோம் எனவே தான் இந்த மாற்று வழி.)

அவ்வளவுதான் இப்போது உங்களது ஜிமெயிலில் இடதுபுறத்தில் டிவிட்டர் சேர்ந்திருப்பதை காணலாம் உங்களது யூசர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து நுழைந்துகொள்ளவும்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 14%


பக்கம் 10 of 46« முதல்...89101112203040...இறுதி »