phishingஆல் பாதிக்கப்பட்ட paypalதளம்
புதுவை.காம் வாசகர்களுக்கு வணக்கம் எங்களின் இணையதளத்தில் சில மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருவதால் இணையதளம் சிலவேலைகளில் திறக்காமல் போகலாம். அதற்காக வருந்துகிறோம். கூடியவிரைவில் பணியினை செய்துமுடிக்கவும் முயற்சிக்கின்றோம்.
இன்றைய பதிவில் Paypal phishing இல் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்க்கான வழிமுறைகளை படைக்கிறோம்.
பொதுவாக paypal என்பது ஆன்லைனில் பணம் செலுத்தும் ஒரு சேவையாகும். உங்களது கிரெடிட் கார்டு மூலமாக இணையத்தில் பணம் செலுத்தும் ஒரு சேவையை இவர்கள் அளிக்கிறார்கள். ஆனால் இந்த இணையதளமும் சமீபத்தில் phishing ஆல் பாதிக்கப்பட்டுள்ளது.
அதாவது paypalலிலிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருப்பதை போலவும் அதில் உங்களது கணக்கை யாரோ தவறாக பயன்படுத்தியிருப்பதாகவும் அதனை சரி செய்ய இங்கே கிளிக் செய்யவும் என கூறி ஒரு லிங்கையும் அளித்திருப்பார்கள். இதுபோல ஏதாவது மின்னஞ்சல் உங்களுக்கு வந்தால் அது phishing mail ஆக இருக்கலாம்.

அல்லது உங்களின் ஆன்லைன் paymentடினை உறுதிசெய்துகொள்ளும்படியான ஒரு போலி மின்னஞ்சலை அளித்திருப்பார்கள்.

நம்மில் பலரும் இந்த சேவையை இணையத்தில் பயன்படுத்துவதால் இக்கட்டுரை பலருக்கு பயன்படும் என நம்புகிறோம். paypal phishing கிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை பின்படுத்துங்கள். இம்முறை ஆன்லைன் banking க்கும் பொருந்தும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
1. paypal க்கு எக்காரணத்தை கொண்டும் உங்களுக்கு வந்த மின்னஞ்சல் மூலமாக கிளிக் செய்து நுழையவேண்டாம்.
2. paypal என்றுமே உங்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை மின்னஜ்சலில் கேட்காது என்பதை கவனத்தில் கொள்க.
3. உங்களுக்கு paypalலிலிருந்து சந்தேகம்படும்படியான மின்னஞ்சல் வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம்.
4. அப்படிபட்ட மின்னஞ்சலை உடனடியாக spoof@paypal.com என்ற முகவரிக்கு forward செய்துவிடவும்.
5. இணையதளத்திற்கு உங்களது வெப் பிரவுசரில் https:// www.paypal.com என தட்டச்சு செய்தே நுழையவும்.
6.தளத்திற்க்குள் நுழைந்தவுடன் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுக்கும் முன்னர் அது உண்மையான தளம் தானா என சோதித்துக்கொள்ளவும்.

மேற்கண்டவாறு முன்னெச்சரிக்கையாக உங்களது கணக்கை paypal phishing கிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும்.
குறிப்பு: உங்களது கணினியை உங்களைத்தவிர பிறரும் பயன்படுத்துவதாக இருந்தால் paypal மற்றும் வங்கிகணக்கு எண்கள் போன்றவற்றை கணினியிலும் இணைய உலவியிலும் சேமித்துவைக்காதீர்கள்.
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
Popularity: 15%





















அவ்வளவுதான் இப்போது கிடத்த ரிசல்டை பாருங்கள்.





