Nero .nrg கோப்புகளை .iso கோப்பாக மாற்றுவது எப்படி?
CD Burning/Writing ற்கு இன்று பலரும் உபயோகிக்கும் மென்பொருள் Nero Burning Rom இதில் நீங்கள் உங்களுடைய குறுந்தகடில் உள்ள தகவல்களை உங்களுடைய கணினிக்கு image file ஆக நகலேடுக்கலாம். இந்த image பைலின் extension .nrg என இருக்கும். இது nero மென்பொருளின் கோப்பின் extension ஆகும்.
இந்த கோப்பினை nero மென்பொருள் இருந்தால் மட்டுமே இதை நீங்கள் புதிய குறுந்தகடில் பதிய முடியும். இந்த கோப்பினை உங்களுடைய நண்பருக்கு கொடுத்தால் அவர் கணினியில் nero மென்பொருள் இருந்தால் மட்டுமே இந்த கோப்பினை அவர் CD யில் பதிய முடியும். இதர சில Disc Writing மென்பொருட்கள் மட்டுமே .nrg கோப்புகளையும் கையாள்கிறது.
இது போன்ற தருணங்களில் Nero மென்பொருள் இல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் Disc Writing மேன்போருளிலேயே பதிய இந்த சிறிய டூலை பயன்படுத்தி உங்களுடைய .nrg கோப்பை .iso கோப்பாக மாற்றினால் போதுமானது. .iso கோப்பினை அனைத்து Disc Writing மென்பொருட்களும் கையாளும்.
இந்த nrg2iso லிங்கை கிளிக் செய்து இந்த டூலை பதிவிறக்கிக் கொள்ளவும். இதனை நிறுவியபின் இதில் உள்ள exe கோப்பை இயக்கினால் உங்களுக்கு படத்தில் உள்ளவாறு ஒரு சிறிய விண்டோ தோன்றும்.

இதில் உள்ள Browse பட்டனை கிளிக் செய்து உங்களுடைய .nrg கோப்பை தேர்வு செய்யவும். அடுத்து Convert என்கிற பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய .nrg கோப்பை .iso கோப்பாக சிறிது நிமிடத்தில் மாற்றிவிடும்.

குறிப்பு: உங்களுடைய .nrg கோப்பும் அப்படியே இருக்கும்.
Popularity: 81%
|
|
பகிர்வு |

நண்பரே!நல்ல பயனுள்ள தகவல்.நன்றி.அதே சமயம் .nrg கோப்பை எப்படி உருவாக்குவது என்றும் சொல்லுங்களேன்.
நன்றி. Nero வில் copy disc கொடுத்து Destination இல் Image Drive ஆக கொடுத்து உங்களுடைய நகலை .nrg file ஆக சேமிக்கலாம்.