தமிழ் எழுத்துருவில் இந்திய ரூபாய் குறியீட்டை பயன்படுத்த

இன்று நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளும் விதமாக இந்திய ரூபாய் க்கு புதிய குறியீடு கிடைத்தாகிவிட்டது. இதன் அடுத்தகட்டமாக இந்த குறியீட்டை கணினி, தொலைபேசி போன்ற கருவிகளில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் காணலாம். அதுவரை நாம் ஏன் பொறுத்திருக்க வேண்டும். ஏன் நாமே உருவாக்கக் கூடாது என்று நினைகின்ற தருணத்தில் இந்திய ரூபாய்க்காண எழுத்துருவை வேறொருவர் வெளியிட்டதில் சிறிய வருத்தம். இருப்பினும் நான் இந்த குறியீட்டை தமிழ் எழுத்துருவில் முதன்முறையாக இணைத்துள்ளேன் என்பதில் சிறிய மகிழ்ச்சி. இந்த குறியீடு எந்த தமிழ் எழுத்துருவிலும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் நம் கணினியில் உள்ள Latha எழுத்துருவிலேயே இதனை சேர்த்துள்ளேன். இந்த லிங்கை கிளிக் செய்து இந்த எழுத்துருவை பதிவிறக்கிக் கொள்ளவும். பின்னர் உங்களுடைய கணினியில் உள்ள fonts போல்டரை திறக்கவும். அதில் உள்ள Latha என்கிற பெயரில் இருக்கும் இரண்டு எழுத்துருக்களையும் முதலில் பேக்கப் செய்து கொள்ளவும். அடுத்து fonts போல்டரில் உள்ள அவ்விரு எழுத்துருக்களையும் delete செய்யவும். இப்பொழுது நீங்கள் பதிவிறக்கிய எழுத்துருக்களை fonts போல்டரில் சேமிக்கவும்.

பயன்பாடு

Indian currency tamil font

இந்த குறியீட்டை பயன்படுத்த உங்கள் விசைபலகையில் உள்ள (`) பட்டனை அழுத்தினால் உங்களுக்கு Latha எழுத்துருவில் இந்திய ரூபாய்க்கான குறியீட்டை காணலாம்.

படைப்பு பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 44%



பகிர்வு

12 Responses to “தமிழ் எழுத்துருவில் இந்திய ரூபாய் குறியீட்டை பயன்படுத்த”

  1. sakthi says:

    our Indian currency got the symbol by IIT student & with the help of Pudhuvai People now it’s being used in all of our system … Thank u Pudhuvai….

  2. pandian says:

    உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்….

  3. Mohamed says:

    இவ்வாறு தயார் செய்த கோப்பினை அனைத்து கணினிகளிலும் பார்க்க இயலுமா? அல்லது இந்த எழுத்துரு இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியுமா?

  4. @pandian மிக்க நன்றி திரு பாண்டியன்.

  5. @Mohamed இந்த எழுத்துரு உள்ள அனைத்து கணினியிலும் இதை நாம் பார்க்கலாம். அனைத்து கணினியிலும் பார்க்கும் வண்ணம் இயங்குதளத்தில் மாற்றத்தை நம்மால் கொண்டு வர முடியாது. நன்றி.

  6. அருமை அருமை! தமிழ் வலையுலகில் – தமிழ் எழுத்துருவில் முதன்முதலாக இந்திய ரூபாயின் குறியீட்டினை வெளியிட்டு எம் போன்றோரும் பயன்படுத்துமாறு விளக்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தாங்கள் கொடுத்த எழுத்துருவை பயன்படுத்தியதில் கணினியில் உள்ள தமிழ் எழுத்துகள் பெரியதாகவும் தெளிவாகவும் இருப்பதாக உணர்கிறேன் நன்றி.

  7. நல்ல செய்திக்கு வாழ்த்துகள்

  8. @எசாலத்தான் @குடந்தை அன்புமணி மிக்க நன்றி நண்பர்களே.

  9. நல்ல பதிவு…

    ஆனால் தமிழுருவில் இமேஜாக இந்த குறியிட்டை உங்கள் வலை தளத்தில் போட்டிருக்கலாமே?

  10. நல்ல ஆக்கம் ஒன்று தங்களுடன் இணைந்ததால் எனக்கு நல்ல பிரயோசனம் சகோதரா. என் தள வருகைக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Security Code: