Google Buzz பயன்பாட்டை நிறுத்த!
முந்தைய பதிவில் Google Buzz பற்றிய முன்னோட்டத்தை பார்த்தோம்.
இன்று Google Buzz இணைய பயனாளர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது என்பது நாம் யாவரும் அறிந்ததே. அறிமுகமான இரண்டு தேதிகளிலேயே இதன் சேவை இணைய பயனாளர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இது மக்கள் அனைவரையும் கவர்ந்த்திருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். இதன் வெற்றியை அறிய நாம் சிறிது காலம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அதுவரை நீங்கள் விருப்பப்பட்டால் இந்த Google Buzz சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வழி இருக்கிறது. நாம் நினைக்கும் தருணத்தில் இந்த சேவையை திரும்ப செயல்படுத்திக் கொள்ளலாம்.

இதைச் செய்ய உங்கள் Gmail கணக்கை திறக்கவும். பக்கத்தின் முடிவில் படத்தில் உள்ளது போல நிறைய சுட்டிகள்(Links) இருக்கும். அதில் உள்ள Turn off buzz என்ற சுட்டியை க்ளிக் செய்தால் போதும். உங்களுடைய Google Buzz நிறுத்தப்பட்டுவிடும்.
Popularity: 25%
|
|
பகிர்வு |
