உங்கள் வலைபக்கத்திற்கு Facebook Like Box இணைக்க
Facebook இணையதளத்தின் முலம் நீங்கள் உங்கள் வலைபக்கத்திற்கு Traffic ஐ கொண்டுவரலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் அடிப்படையில் உங்களுடைய வலைப்பக்கத்திற்கு Facebook Like Box ஐ இணைப்பது எப்படி என்று இன்று பார்க்கலாம். Facebook Like Box என்பது Google Followers போன்றதாகும். உங்களுடைய இணையதளத்தை/இணையபக்கத்தை விரும்பியவர்கள் Like என்கிற லிங்கை கிளிக் செய்து உங்களுடைய Like Box இல் இணைவார்கள்.
உதாரணமாக குமார் என்கிற நபர் உங்கள் பக்கத்தை Like செய்தவுடன் “Kumar likes <Your page name>” என்கிற செய்தி குமாரின் அனைத்து நண்பர்களுக்கும் தெரியவருகிறது. இதனால் அவர்களும் உங்கள் Facebook பக்கத்தை காண வாய்பிருக்கிறது.
இதனை செய்ய முதலில் உங்களுக்கு Facebook இல் ஒரு அக்கவுண்ட் இருக்க வேண்டும். அந்த அக்கவுண்டை வைத்து முதலில் Facebook இல் லாகின் செய்யவும். பின்பு இந்த சுட்டியை கிளிக் செய்து கொள்ளவும். இந்தப் பக்கத்தில் Community Page என்கிற இடத்தில் உங்களுடைய பக்கத்திற்கான தலைப்பை கொடுத்து Create Community Page என்கிற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கான பக்கம் தயார்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய தகவல்களை பூர்த்தி செய்து கொள்ளவும்.

பின் address bar இல் உள்ள முகவரியை காபி செய்து Notepad இல் பேஸ்ட் செய்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த சுட்டியை கிளிக் செய்து Facebook Like Box பக்கத்தை திறந்து கொள்ளவும். இங்கு தான் நாம் Like Box ஐ உருவாக்கப் போகிறாம். இங்கு என்கிற இடத்தில் நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் முகவரியை கவனித்தீர்கள் என்றால் 15 இலக்கத்தில் எண்கள் இருக்கும்.
![]()
இதுவே உங்களுடைய பக்கத்திற்கான ID. இந்த ID ஐ என்கிற இடத்தில் கொடுத்து width இல் உங்களுக்கான அகலத்தை கொடுக்கவும். பின் உங்களுக்கு தேவைபட்டால் Stream மற்றும் Header ஆப்ஷன்களை டிக் செய்து கொள்ளலாம். இதனை பற்றி தெரிந்துகொள்ள பக்கத்தில் உள்ள Preview ஐ கவனிக்கவும்.

அடுத்து Get Code என்கிற பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான Like Box code காண்பிக்கப்படும்.

இதில் iframe இல் இருக்கும் code ஐ காபி செய்து உங்களுடைய Blog Gadget இல் HTML/Javascript gadget இல் பேஸ்ட் செய்தால் உங்களுடைய வலைபக்கத்தில் Facebook Like Box வந்துவிடும். XFBML பகுதியில் இருக்கும் code ஐ பற்றி கண்டு கொள்ளவேண்டாம்.
Popularity: 33%
|
|
பகிர்வு |

Thank you Soo much !:) use full information!!