Archive for the 'விண்டோஸ்XP பூட்டபுள் சிடி உருவாக்கம்' Category

விண்டோஸ் XP பூட்டபுள் சிடி உருவாக்குவோம் நிறைவுப் பகுதி

இந்த படிநிலையில் User Login அக்கவுண்ட்டை உருவாக்குவோம். முதலில் C:\xpcd\$OEM$ இல் ஒரு text பைலை உருவாக்கவும். அதை நோட்பேடில் திறக்கவும். பின்னர் கீழேயுள்ள வரிகளை பார்த்து நீங்கள் உங்களின் யூசர் அக்கவுண்ட் பெயரை கொடுக்கவும்.

net user Nithi /add
net localgroup Administrators Nithi /add
net accounts /maxpwage:unlimited
regedit /S autologon.reg
EXIT

பின்னர் இந்த பைலை useraccountsஎன்ற என்ற பெயரில் சேமிக்கவும். பின்னர் இந்த பைலின் extensioncmdஎன மாற்றிக்கொள்ளவும். (useraccounts.cmd). இனி இந்த useraccounts.cmd cmdlines.txt இல் சேர்க்கவேண்டும். இதற்க்கு cmdlinesஐ திறக்கவும்(C:\xpcd\$OEM$) கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்து அதை சேமித்து மூடவும்.

“useraccounts.cmd”

குறிப்பு:

உங்களது யூசர் அக்கவுண்ட்க்கு நீங்கள் கடவுச்சொல் கொடுக்க விரும்பினால் XP இன்ஸ்டாலேஷனுக்கு பிறகு விண்டோஸின் உள்ளே சென்றவுடன் கடவுச்சொல்லை கொடுத்துக்கொள்ளவும் காரணம் இந்த பைலிலேயே கடவுச்சொல்லை கொடுத்தால் இந்த சிடியை வேறு யாராவது திறந்து பார்த்தார்களேயானால் உங்களது கடவுச்சொல் களவு போக வாய்ப்புள்ளது.

இதுவே இக்கட்டுரையின் கடைசி படிநிலையாகும். ஆம் இதில் நாம் உருவாக்கிய C:\xpcd போல்டரை பூட்டபுள் சிடி க்கு மாற்ற இருக்கிறோம். இதற்கு உங்களிடம் நீரோ தொகுப்பு வேண்டும் (Nero Burning Rom) வெர்ஷன் 6 க்கு மேல் இருப்பின் நல்லது. நீரோவில் நாம் உருவாக்க இருக்கும் பூட்டபுள் சிடி பூட்டாக வேண்டுமெனில் நமக்கு cdsector.bin என்ற சிறிய பைல் தேவை. இதை இணையத்திலிருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

முதலில் Nero burning rom இயக்கி new compilation என்பதை தேர்வு செய்யவும்.

பின்னர் cd-rom (boot) என்பதை செலெக்ட் செய்க அதன்பின் Image fileஎன்பதனை டிக் செய்து browse பட்டனை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்த cdsector.bin ஐ தேர்ந்தெடுக்கவும்.


பின்னர் “advanced”  என்பதை  டிக் செய்து “type of emulation” இல்  “No Emulation ” என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் “number of readable sectors ” என்பதில் “4″ என தட்டச்சு செய்யவும்.

கடைசியாக New என்பதை அழுத்தவும்இப்போது நீரோவின் burning rom window தோன்றும், அதில் வலது புறத்தில் இருக்கும் file browser இல் C:\xpcd ஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர் படத்தில் காட்டியவாறு xpcdஇல் இருக்கும் அனைத்து பைல்களையும் select செய்துகொண்டு இடதுபுறம் drag செய்து விடவும்.

(படத்தை பார்க்கவும்)

பின்னர் நீங்கள் உருவாக்கும் சிடிக்கு ஒரு பெயர் கொடுக்கவேண்டுமல்லவா? இதற்க்கு நீரோவில் இடதுபுறம் இருக்கும் சிடி ஐகானை மவுஸால் வலது கிளிக் செய்து “Rename” என்பதை அழுத்தி நீங்கள் கொடுக்க இருக்கும் பெயரை தட்டச்சு செய்துகொள்ளவும்.

கடைசியாக burn என்பதனை அழுத்தி சிடியை write செய்துகொள்ளவும். அவ்வளவுதான் விண்டோஸ் XPபூட்டபுள் சிடியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம். என்ன நண்பர்களே பூட்டபுள் சிடி உருவாக்கும் நுட்பத்தை எங்கள் புதுவை.காம் வாயிலாக கற்றுக்கொண்டீர்களா?.

இதை சோதிக்க கணினியில் பார்மேட் செய்து சோதிப்பதைவிட Microsoft Virtuel PC 2007 என்ற இலவச மென்பொருள் மூலம் நாம் தயாரித்த பூட்டபுள் XP சிடியை இன்ஸ்டால் செய்து சோதித்துக்கொள்ளவும்

இது யாருக்காவது ஒருவருக்கு உதவியிருந்தாலே அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். நேரமின்மை காரணமாக நான் இக்கட்டுரையில் பல படிநிலைகளை  நீக்கிவிட்டே வெளியிட்டு இருக்கிறேன். மேற்சொன்னவைகள் மிகவும் “Basic ” ஆப்ஷன்கள் மட்டுமே.இதுவே உங்களுக்கு பேருதவியாக இருக்குமென புதுவை.காம் நம்புகிறது. எங்களால் “advanced ” நிலையில் உருவாக்கப்பட்ட “XP” பூட்டபுள் DVD தொகுப்பில் நாங்கள் நிறைய மென்பொருள்களை சேர்த்திருக்கிறோம். மேலும் பல மாற்றங்கள்  செய்தும் வெற்றிகரமாக உருவாக்கியிருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையில் குறிப்பிடிருந்த அத்தனை ஆப்ஷன்ஸ்களையும் நீங்கள் “USB” பென்டிரைவிலிருந்து நிறுவவேண்டி உருவாக்கம் செய்யும் “XP ” யிலும்  புகுத்தலாம் என்பதும் எங்களால் சோதிக்கப்பட்டு உருவாக்கம் செய்துள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் என்னுடைய 8 GB பென்டிரைவில் “Vista,XP  ” மற்றும் பலவிதமான “Tools ” களை இணைத்து உருவாக்கியுள்ள பூட்டபுள் USBபென்டிரைவை அதில் குறிப்பாக அனைத்து வகையான மதர்போர்டுக்கான டிரைவர்களையும் இணைத்தே தாயர் செய்து அதனையும் சோதித்து பார்த்தோம் கிட்ட தட்ட 10 விதமான மதர்போர்டுகளில் சோதனை ஓட்டம் செய்ததில் 10 கணினியிலும் “XP” உடனே டிரைவர்கள் தானாகவே நிறுவிக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை நிரூபிக்க என்னுடைய இந்த வீடியோ தொகுப்பை காணவும்:

என்றும் அன்புடன்
நித்தியானந்தம் M.Com,MIRIM
System Eng, France

Popularity: 15%