இன்று இணைய பயன்பாடு பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும் இந்தியாவைப் பொருத்தவரை இணைய வேகம் மேலைநாடுகளை பொருத்தமட்டில் சற்று குறைவே. நம்மால் முடிந்தவரை இணையத்தை நமக்குத் தெரியாமல் பயன்படுத்தும் மென்பொருள்களை கண்டுபிடித்து அதை நீக்கினால் நமக்கு இணையத்தின் வேகம் வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே வரும்.
Internet Speed Optimization இல் இதுவும் ஒரு அங்கம். இதற்கு நாம் எந்தவொரு மென்பொருளையும் நம் கணினியில் நிறுவத் தேவையில்லை. இந்த சேவை உங்கள் விண்டோஸ் கணினியிலேயே இருக்கிறது. முதலில் உங்கள் கணினியில் உள்ள Run dialog box ஐ திறந்து அதில் perfmon என தட்டச்சு செய்து என்டர் கொடுக்கவும். உங்களுக்கு Performance Monitor விண்டோ திறக்கும்.

இதில் உள்ள Open Resource Monitor என்ற லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கு புதியதாய் ஒரு விண்டோ திறக்கும். (இந்த சேவை Windows XP யில் இல்லை என்பது கவலைக்குரிய செய்தி, Vista மற்றும் 7 பதிப்புகளில் இந்த சேவை இருக்கிறது.) இதில் உள்ள Network டேபை கிளிக் செய்தால் உங்களுடைய கணினியில் எந்த மேன்போருளெல்லாம் இணைய இணைப்பை பயன்படுத்துகிறதோ அவை எல்லாம் பட்டியலிடப்படும். அது மட்டுமின்றி அவை எடுத்துக்கொள்ளும் Send/Receive Bytes ஐயும் நமக்குத் தருகிறது.

இதனால் நமக்கு தெரியாத தேவைப்படாத மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தினால் நம் கணினியில் இணைய வேகத்தை அதிகரிக்க வாய்ப்புண்டு.
Popularity: 30%
இது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அத்தியாவசியமான விஷயம். உங்கள் கணினி சீராக இயங்க வேண்டுமென்றால் உங்களுடைய கணினிக்கு சமச்சீரான தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும். நீங்கள் கணினியில் அதிக நேரம் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய கணினியில் உள்ள Hardisk, Processor மற்றும் Motherboard கள் விரைவில் வெப்பமாகிவிடும். இதனால் உங்களுடைய கணினியின் ஆயுட்காலமும் வெகுவாக குறைகின்றது. உதாரணமாக 5 வருடம் வரை இயங்கும் தன்மையுள்ள வன்பொருட்கள் 4 ஆண்டுகள் வரையே இயங்கும். இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த வெப்பத்தை குறைக்க நம் கணினியில் Processor/Motherboard Cooling Fan பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் முழு பயனை நாம் அடைவதில்லை.

Speed Fan என்கிற இந்த சிறிய இலவச மென்பொருளைக் கொண்டு உங்களுடைய கணினியின் Temperature ஐ அறிந்துகொள்ளலாம். இதனால் உங்களுடைய கணினி இருக்கும் அறையின் வெப்ப அளவை குறைக்க நீங்கள் வழி வகுக்கலாம். அது மட்டுமின்றி இந்த மென்பொருள் நேரடியாக உங்களுடைய கணினியை கையாளும் திறன் உள்ளதால் உங்களுடைய கணினியை இது கண்காணித்து உங்களுக்கு தெரிவிக்கிறது. பல மணி நேரம் கணினியை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான ஒரு அவசிய மென்பொருள். இந்த Speed Fan மென்பொருளை பதிவிறக்க இந்த சுட்டியை கிளிக் செய்யுங்கள்.
Popularity: 37%
உங்களுடைய மிக முக்கியமான தகவல்களை மறைத்து வைக்க இந்த steganography தொழில்நுட்பம் பயன்படுகிறது. பொதுவாக நாம் நம்முடைய முக்கியமான தகவல்களை மறைத்து வைக்க அந்த கோப்பிற்கு கடவுச்சொல் கொடுத்து வைப்போம் ஆனால் அந்த கோப்பினை மற்றவர்கள் பார்க்க நேர்ந்தால் இதில் ஏதோ முக்கியமான தகவல்கள் இருக்கிறது என்று அனைவராலும் கணிக்க முடியும்.
இந்த Image Steganography தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிறிய மென்பொருள் வழியாக உங்களுடைய .txt கோப்புகளில் உள்ள தகவல்களை உங்களுடைய ஏதாவதொரு புகைப்படத்தில் மறைத்துக்கொள்ளலாம். அந்த புகைப்படத்தை வேறொருவர் பார்த்தால் அதில் மறைத்துவைக்கப்பட்டுள்ள தகவல்களை எவராலும் பார்க்க முடியாது. அது மட்டுமின்றி இந்த புகைப்படங்களை யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பலாம். இந்த மென்பொருளை வைத்திருப்பவர்களால் மட்டுமே உங்கள் படத்தில் ஒளித்துவைக்கப்பட்ட தகவல்களை பார்க்க முடியும்.

இந்த மென்பொருளை பதிவிறக்க இந்த சுட்டியை க்ளிக் செய்யவும்.
Input File இல் உங்களுடைய .txt கோப்பையும் Input Image இல் உங்களுடைய புகைப்படத்தையும் தேர்வு செய்து Encode பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கான புகைப்படத்தை சேமிக்கவும். மீண்டும் அதில் உள்ள தகவலை திரும்பப்பெற HAL File இல் உங்களுடைய encode செய்யப்பட்ட புகைப்படத்தை தேர்வு செய்து Decode க்ளிக் செய்தால் உங்களுடைய மறைத்துவைக்கப்பட்ட தகவலைபெறலாம்.
குறிப்பு: இது Java தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதால் உங்களுடைய கணினியில் ஜாவா நிறுவியிருத்தல் அவசியம். ஜாவா இல்லையென்றால் இந்த சுட்டியை க்ளிக் செய்து பதிவிறக்கிக்கொள்ளவும். JAR பைலை அப்படியே Double Click செய்து ரன் செய்யவும்.
Popularity: 91%
CD Burning/Writing ற்கு இன்று பலரும் உபயோகிக்கும் மென்பொருள் Nero Burning Rom இதில் நீங்கள் உங்களுடைய குறுந்தகடில் உள்ள தகவல்களை உங்களுடைய கணினிக்கு image file ஆக நகலேடுக்கலாம். இந்த image பைலின் extension .nrg என இருக்கும். இது nero மென்பொருளின் கோப்பின் extension ஆகும்.
இந்த கோப்பினை nero மென்பொருள் இருந்தால் மட்டுமே இதை நீங்கள் புதிய குறுந்தகடில் பதிய முடியும். இந்த கோப்பினை உங்களுடைய நண்பருக்கு கொடுத்தால் அவர் கணினியில் nero மென்பொருள் இருந்தால் மட்டுமே இந்த கோப்பினை அவர் CD யில் பதிய முடியும். இதர சில Disc Writing மென்பொருட்கள் மட்டுமே .nrg கோப்புகளையும் கையாள்கிறது.
இது போன்ற தருணங்களில் Nero மென்பொருள் இல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் Disc Writing மேன்போருளிலேயே பதிய இந்த சிறிய டூலை பயன்படுத்தி உங்களுடைய .nrg கோப்பை .iso கோப்பாக மாற்றினால் போதுமானது. .iso கோப்பினை அனைத்து Disc Writing மென்பொருட்களும் கையாளும்.
இந்த nrg2iso லிங்கை கிளிக் செய்து இந்த டூலை பதிவிறக்கிக் கொள்ளவும். இதனை நிறுவியபின் இதில் உள்ள exe கோப்பை இயக்கினால் உங்களுக்கு படத்தில் உள்ளவாறு ஒரு சிறிய விண்டோ தோன்றும்.

இதில் உள்ள Browse பட்டனை கிளிக் செய்து உங்களுடைய .nrg கோப்பை தேர்வு செய்யவும். அடுத்து Convert என்கிற பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய .nrg கோப்பை .iso கோப்பாக சிறிது நிமிடத்தில் மாற்றிவிடும்.

குறிப்பு: உங்களுடைய .nrg கோப்பும் அப்படியே இருக்கும்.

Popularity: 81%