உங்களிடம் இருக்கும் வீடியோக்களை உங்களது தேவைக்கேற்ப அதனை கன்வர்ட் செய்து பயன்படுத்துவீர்கள் சான்றாக அலைபேசிக்கு, i-pod,etc….
இதற்க்கென எண்ணற்ற மென்பொருள்தொகுப்புகள் இருக்கின்றன. சில நாம் விலை கொடுத்து வாங்கக்கூடியதாக இருக்கும். சில இலவச மென்பொருள்கள் இருப்பினும் அதிகப்படியான பார்மேட்டுகளை ஆதரிப்பது இல்லை எனவே நாங்கள் இது தொடர்பான மென்பொருளை இணையத்தில் அலசிபார்த்ததில் “Media Coder” என்ற மென்பொருள் இலவசமாகவும் பயன்படுத்த ஏதுவாகவும் மேலும் நிறைய பார்மேட்டுகளையும் சப்போர்ட் செய்கிறது.
- MP3, Vorbis, AAC, AAC+/HE-AAC, AAC+v2/HE-AAC v2, MusePack, Speex, AMR, WMA, RealAudio, mp3PRO*
- FLAC, WavPack, Monkey’s Audio, OptimFrog, AAC Lossless, TTA, WAV/PCM, Waveform
- H.264, XviD, DivX, MPEG 1/2/4, Theora, Flash Video, Dirac, 3ivx*, RealVideo*, Windows Media Video
- AVI, MPEG/VOB, Matroska, MP4, PMP, RealMedia*, ASF, Quicktime*, OGM*
- CD, DVD, VCD, SVCD, CUESheet

MediaCoder, MC iPhone/iPod touch, MediaCoder special PSP போன்ற edition களில் கிடைக்கிறது.
இதனை பதிவிறக்கம் செய்து நீங்களும் பயன்படுத்திபாருங்கள்:
சுட்டி
Popularity: 33%
நீங்கள் ஒரு படத்தை கணினியில் பார்த்துகொண்டிருக்கிறீர்கள் அதில் உள்ள ஒரு குறிப்பிட்ட காட்சியை புகைப்படமாக எடுக்கவேண்டும் அல்லது Screenshot டாக மாற்ற விருப்பப்படுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் நேரடியாக “printscreen” கொடுத்து “screenshot” எடுத்தால் அது கருப்பாக இருக்கும். பார்க்க கீழேயுள்ள படம்:

இதை சரி செய்வது எப்படி என பார்ப்போம். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன ஆனால் அந்த இரண்டுவழியுமே “VLC Media Player” மூலமாகவே செய்ய இருப்பதால் முதலில் உங்கள் கணினியில் “Vlc Media Player” ஐ பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.
வழி 1 (புகைப்படம் மட்டும்) :
“VLC Media Player” ஐ இயக்கவும், பின்னர் உங்கள் வீடியோ கோப்பை ஓட விடவும். நீங்கள் புகைப்படமாக மாற்ற இருக்கும் காட்சி வந்தவுடன் “Pause” செய்யவும். இப்போது “Video>Screenshot” ஐ அழுத்தவும்.

இப்போது உங்களது ஷாட் “My Documents\My Images” இல் vlcsnap என “PNG” வடிவில் சேமிக்கப்பட்டிருக்கும்.

வழி 2 (total screen capture) :
நீங்கள் இதே ஷாட்”screenshot” ஆக தேவைப்பட்டால்(tutoriel purpose) இந்த வழியை பின்பற்றலாம்.
“Start>All Programmes>VideoLan>Vlc Media player” வலது கிளிக் செய்யவும் அல்லது டெஸ்க்டாப்பில் “VLC” ஷார்ட்கட் கீ இருந்தால் அதில் வலது கிளிக் செய்து “Properties” ஐ தேர்வு செய்யவும்.

இப்போது கீழ்கண்ட விண்டோ தோன்றும். அதில் –nooverlay
என நான் படத்தில் காட்டியிருப்பது போல தட்டச்சு செய்துகொள்ளவும்.
இனி, “Apply” செய்து “ok” செய்யவும்.

இனி, உங்களது வீடியோ தொகுப்பை “VLC” இல் ஓடவிடவும்.உங்களுக்கு தேவையான ஷாட் வந்தவுடன் வீடியோவை “Pause” செய்து தட்டச்சுபலகையில் “alt+printscrn” ஐ ஒருசேர அழுத்தவும். “alt+printscrn” கொண்டு எடுக்கப்படும் பிரிண்ட் ஸ்கிரீனானது குறிப்பிட்ட விண்டோவை (activate window) மட்டுமே பிரிண்ட் செய்யும். உங்களுக்கு முழு ஸ்கிரீனும் பிரிண்ட் ஸ்கிரீனாக வேண்டுமெனில் தட்டச்சு பலகையில் உள்ள வெறும் “printscrn” ஐ மட்டும் அழுத்தவும் இப்போது உங்களுக்கு படமானது Screen ஷாட்டாக மெமரி ஆகி இருக்கும் இப்போது “Ms Paint” ஐ இயக்கவும்.
தட்டச்சு பலகையில் “ctrl +V” ஐ ஒருசேர அழுத்தவும். அதில் உங்களது “printscreen” னும் பேஸ்ட் ஆகி இருப்பதை காணலாம்.

அவ்வளவுதான், படப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
Popularity: 21%