Archive for the 'உபுண்டு' Category

உபுண்டுவில் “Bluetooth” இணைப்பை ஏற்படுத்துவது எப்படி?

3 comments 08 October 2009 Under: உபுண்டு

உங்களுடைய கைபேசியை “Bluetooth” வழியாக கணினியிலிருந்து கைபேசிக்கும் அல்லது கைபேசியிலிருந்து கணினிக்கும் கோப்புகளை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். விண்டோஸ் தொகுப்பாக இருந்தால் இதனை எளிதாக இணைத்து தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் உபுண்டு லினக்ஸை பயன்படுத்தினால் சாத்தியமா? சாத்தியமே..

புதுவை.காம் வாசகரான திரு.செல்வா அவர்கள்,

“லினக்ஸ் பற்றி அவ்வப்போது எழுதி வருவது பாராட்டிற்குறியது. உபுண்டுவில் புளூடூத் முறையில் எப்படி நமது செல்பேசியை இணைத்து கோப்புகளை பரிமாறிக் கொள்வது? என்பதை பற்றி எழுதுங்கள்”.

இதே கேள்வியை எங்களிடம் மேலும் சிலர் கேட்டிருந்தனர். எனவே இன்றைய கட்டுரையை இவர்களுக்காக படைக்கிறோம்.

உங்களிடம் இருக்கும் “Bluetooth Device” ஐ உங்களது கணினியில் பொருத்தவும். உபுண்டு அதற்கான டிரைவரை நிறுவிக்கொள்ளும். ஆனால் அனைத்து வகையான “Device” க்கும் டிரைவரை உபுண்டு நிறுவிக்கொள்ளுமா என்பதை நான் கூற இயலாது. (என்னிடம் இருந்த “Bluetooth Dongle” ஐ கணினியுடன் இணைத்தவுடன் தானாகவே டிரைவரை நிறுவிக்கொண்டது).

இனி,”Bluetooth” இயக்கத்திற்கான கோப்பை உபுண்டுவில் நிறுவவேண்டும். இதற்கு “Applications -> Accessories ->Terminal” செல்லவும், பின்னர் கீழே கொடுத்துள்ள கமாண்டை தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.

sudo aptitude install bluez-utils gnome-bluetooth

இப்போது “Bluetooth” கோப்புகளை உபுண்டு இணையதினூடாக பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளும். பின்னர் “Terminal” ஐ மூடிவிட்டு “Applications -> Accessories -> Bluetooth File Sharing” ஐ அழுத்தவும். பின்னர் உங்களது கைபேசியில் “Bluetooth” ஐ எனேபில் செய்துவிட்டு உங்களது கோப்புகளை கணினிக்கு அனுப்பவும். அனுப்பியவுடன் உங்களது கோப்பானது லினக்ஸ் நிறுவியுள்ள ஹார்ட் டிஸ்கில் இருக்கும் “home>Username” இல் இருப்பதை காணலாம்.

அதேபோல கணினியில் இருக்கும் கோப்பை உங்களது கைபேசிக்கு அனுப்பவேண்டுமென்றால், அந்த கோப்பின் மீது மவுஸால் வலது கிளிக் செய்து “Send To” என்பதை தேர்வு செய்யவும் இப்போது தோன்றும் விண்டோவில் “Bluetooth(OBEX Push)” என்பதை தேர்ந்தெடுத்து அதன் கீழே உங்களது கைப்பேசியை தேர்வு செய்யவும். அவ்வளவுதான் கணினியில் இருக்கும் கோப்பு உங்களது கைபேசிக்கு மாற்றப்பட்டிருக்கும்.

இக்கட்டுரையில் என்னுடைய கைபேசி “Samsung U-600″ மூலமாக சோதித்தேன் எனக்கு எவ்விதமான பிழையும் ஏற்படவில்லை.

குறிப்பு:
உங்களது கைப்பேசியையும் கணினியையும் “bluetooth” ஓடு இணைக்கும் போது “pin number” கேட்கும் 1234 என கனிணியிலும் 1234 என கைபேசியிலும் தரவும். இது உபுண்டுவின் டீபால்ட் பின் எண்கள் ஆகும்.

கீழேயுள்ள காணொளியில் இக்கட்டுரையின் செய்முறையை பார்த்து நீங்களும் “bluetooth” இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

Popularity: 10%

உபுண்டுவில் “VLC Media Player” ஐ நிறுவுவது எப்படி?

3 comments 04 October 2009 Under: உபுண்டு

நீங்கள் உபுண்டு லினக்ஸ் தொகுப்பை பயன்படுத்துவராக இருப்பின் உங்களிடம் இருக்கும் மல்டிமீடியா கோப்புகளை இயக்க கண்டிப்பாக ஒரு மென்பொருள் வேண்டுமல்லவா? லினக்ஸில் டீபாள்டாக ஒரு மீடியா பிளேயர் இருந்தாலும் அது அனைத்துவகையான பார்மேட்டுகளை சப்போர்ட் செய்வதில்லை. ஆனால் நீங்கள் உங்களது உபுண்டுவினுள் “VLC Player” ஐ நிறுவிவிட்டால் அனைத்து வகையான பார்மேட்டுகளையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். “VLC Media Player” ஒரு அற்புதமான ஓப்பன் சோர்ஸ் ஆகும். இதன் நன்மையே அனைத்துவகையான “codecs” களையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் நீங்கள் தனியாக எவ்வித “codecs” களும் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. இதனை உபுண்டுவில் மிக எளிமையாக நிறுவலாம். முதலில் உபுண்டுவில் இணைய இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும்.

முதலில் System > Administration > Synaptic Package manager செல்லவும்.
பின்னர் அங்குள்ள “Searchbox” இல் “vlc” என தட்டச்சு செய்யவும். இப்போது கீழேயுள்ள லிஸ்டில் “vlc” என தோன்றும் அதனை கிளிக் செய்து நிறுவிக்கொள்ளவும். “VLC Media Player” ஐ நிறுவியவுடன் Applications—>Sound&Video வில் “VLC Media Player” நிருவப்பட்டிருப்பதை காணலாம். அதனை இயக்கி உங்களது மல்டிமீடியா கோப்புகளை பரிசோதித்துக்கொள்ளவும்.

கீழேயுள்ள கணொளியில் இக்கட்டுரையின் செய்முறை விளக்கத்தை அளித்திருக்கிறேன்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

Popularity: 9%

உபுண்டு/விண்டோஸ் மல்டிபூட்டிங்கில் விண்டோஸை Default ஆக இயக்குவது எப்படி?

5 comments 24 September 2009 Under: உபுண்டு

நீங்கள் உங்கள் கணினியில் உபுண்டு/விண்டோஸ் மல்டிபூட்டிங்காக நிறுவியிருந்தால் கணினியை ஒவ்வொரு முறை நீங்கள் இயக்கும் போதும் பூட்லோடரில் உபுண்டுவே டீபால்ட் ஆக தேர்வுசெய்யப்பட்டிருக்கும். 10 செகெண்டுக்குள் நீங்கள் உபுண்டுவா அல்லது விண்டோஸா என தேர்வு செய்துகொள்ளவேண்டும் இல்லையென்றால் உபுண்டுக்குள்ளே உங்களை அழைத்துச்சென்றுவிடும். ஆனால் நம்மில் பலர் அதிகமாக விண்டோஸ் தொகுப்பையே பயன்படுத்த விரும்புவர், எனவே கணினியில் விண்டோஸை டீபால்டாக பூட் செய்ய உபுண்டுவின் பூட்லோடரை மாற்றியமைக்கலாம்.

முதலில் உபுண்டுவை இயக்கவும்.பின்னர் “Applications>Accesorries>Terminal” ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்களது “Terminal” விண்டோவானது திறக்கப்பட்டிருக்கும்.

பின்னர் கீழ்கண்ட கட்டளையை பிழையின்றி தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.

sudo gedit /boot/grub/menu.lst

இப்போது உங்களின் கடவுசொல்லை கேட்கும். அதையும் தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.

இப்போது உங்களின் பூட்லோடர் கோப்பானது திறக்கப்படும். அதில் கீழேயுள்ள படத்தில் நான் மார்க் செய்து காட்டியபடி அந்த வரிகளை பார்க்கவும். அங்கே “Default 0″ என்பது உபுண்டுவை இயக்க கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளையாகும்.இப்போது “0″வை “4″ என மாற்றவும். நீங்கள் பூட்லோட்டர் Timeout நேரத்தை 10 செக‌ண்டிலிருந்து அதிகமாக்க விரும்பினால் “Timeout 10″ என்பதில் நீங்கள் விரும்புப்படி மாற்றிக்கொள்ளவும். நான் “25″ என மாற்றியுள்ளேன்.

இனி இந்த மாற்ற‌ங்களை save என்பதை கிளிக் செய்து சேமித்துக்கொள்ளவும். பின்னர் கணினியை “Restart” செய்யவும் உங்களது பூட்லோடரில் விண்டோஸானது  “Default” ஆக தேர்வு செய்யப்பட்டிருப்பதை காணலாம்.

படைப்பு பிடித்திருந்தால் தவறாமல் வாக்களிக்கவும்.

Popularity: 10%

உபுண்டு லினக்ஸை மல்டிபூடிங்காக நிறுவுவது எப்படி?

இணைய நண்பர்களுக்கு வணக்கம், எங்களின் விண்டோஸ் XP பூட்டபிள் சிடி உருவாக்கம், தமிழ் தொழில்நுட்ப மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது, மேலும் புதுவை.காம் இணையதளத்திற்கு ஆதரவு தரும் புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் எங்களிடம் தொடர்பு கொண்டு “உபுண்டு” லினக்ஸை நிறுவுவது குறித்த கட்டுரையை வெளியிடமுடியுமா என கேட்டார்கள். மேலும் அதில் பலரும் எங்களிடம் கேட்டது விண்டோஸ் தொகுப்பு இயங்கும் தளங்களில் மல்டிபூடிங்காக நிறுவுவது குறித்து கேட்டிருந்தார்கள். அவர்கள் ஆவலோடு எங்களிடம் கேட்டது “வீடியோ” தொகுப்பாக‌, காரணம் பார்டிஷன் பகுதியில் கொஞ்ச‌ம் குழப்புவதால் எழுத்துக்கட்டுரைகள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டு இருந்தனர். அவர்களின் வேண்டுகோளை நிறைவு செய்யும் பொருட்டு இக்கடுரையை நாங்கள் வீடியோ தொகுப்பாக வெளியிடுகிறோம். காரணம் பெரும்பாலானவர்கள் பார்டிஷன் பாகத்தில் கோட்டை விட்டு கணினியில் தகவல்களை இழந்ததாத தெரிவித்தது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றது எனவே இக்கட்டுரையையை காணொளியாக படைக்கின்றோம்.

மேலும் எழுத்துவடிவத்தில் வெளியிட்ட எங்களின் பல கட்டுரைகளை மற்றவர்கள் கூசாமல் காப்பியடித்து அவர்களது வலைப்பதிவில் அவர்கள் பெயரில் பதிவிட்டுகொள்கின்றனர். எனவே இக்காணொளியில் எங்களின் “புதுவை” வாட்டர் மார்க்கையும் இணைத்துள்ளோம்.

மேலும் நான் உபுண்டுவை பிரெஞ்சு மொழியில் நிறுவி இருக்கிறேன். ஆனால் ஆங்கிலத்தில் விளக்கம் அளித்திருக்கிறேன்.

முக்கிய குறிப்புகள்:
உபுண்டுவை நிறுவும் முன்னர் கணினியில் உள்ள முக்கிய‌ தகவல்களை பேக்கப் செய்து பென்டிரைவ் அல்லது “USB Hard Disk” இல் சேமிதுத்துக்கொள்ளவும். தவறான முறையில் பார்டிஷன் செய்ய வாய்ப்பு இருப்பதால் இந்த முன்யோசனை. எங்களுக்கு உபுண்டுவில் “Dual Booting”(Windows xp/Ubuntu) மற்றும் “Triple Booting” (Windows xp,Vista,Ubuntu) இல் அனுபவம் இருப்பதால் நாங்கள் எந்த பேக்கப்பும் எடுக்கஇல்லை.

இக்கட்டுரையை நான் என்னுடைய சொந்த கணினியில் நிறுவுகிறேன் இதில் ஏற்கனவே விண்டோஸ் “XP” தொகுப்பு இருக்கின்றது.

இதில் C: drive வில் விண்டோஸ் XP தொகுப்பும் D: இல் என்னுடைய பேக்கப் டேட்டாக்களும் இருக்கின்றன. இது இல்லாமல் E: இல் (160GB) கொள்ளளவு கொண்ட  டிரைவில் தான் நான் என்னுடைய உபுண்டுவை நிறுவ இருக்கின்றேன். இந்த 160 GB  இல் நான் 159 ஐ உபுண்டுவின் சிஸ்டம் பார்டிஷனுக்காகவும்(/), 1 GB ஐ “SWAP”பார்டிஷனுக்கும் ஒதுக்குகிறேன். எப்போதும் உபுண்டு நிறுவும் போது 1BG ஐ கட்டாயமாக “SWAP” ற்க்கு ஒதுக்கவேண்டும் என்பதை கருத்தில் கொள்க.

இக்கட்டுரையில் நான் உபுண்டுவை பென்டிரைவில் இருந்து நிறுவுகிறேன் உங்களிடம் “USB” பூட்டபுள் உபுண்டு இல்லையென்றால் சிடியை கொண்டே நிறுவிக்கொள்ளவும். சிடியிலிருந்து நிறுவுவதைவிட “USB” யிலிருந்து நிறுவும் போது 3இல் ஒரு 1 பங்கு நேரம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Blog Widget by LinkWithin

Popularity: 12%