இன்று நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளும் விதமாக இந்திய ரூபாய் க்கு புதிய குறியீடு கிடைத்தாகிவிட்டது. இதன் அடுத்தகட்டமாக இந்த குறியீட்டை கணினி, தொலைபேசி போன்ற கருவிகளில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் காணலாம். அதுவரை நாம் ஏன் பொறுத்திருக்க வேண்டும். ஏன் நாமே உருவாக்கக் கூடாது என்று நினைகின்ற தருணத்தில் இந்திய ரூபாய்க்காண எழுத்துருவை வேறொருவர் வெளியிட்டதில் சிறிய வருத்தம். இருப்பினும் நான் இந்த குறியீட்டை தமிழ் எழுத்துருவில் முதன்முறையாக இணைத்துள்ளேன் என்பதில் சிறிய மகிழ்ச்சி. இந்த குறியீடு எந்த தமிழ் எழுத்துருவிலும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் நம் கணினியில் உள்ள Latha எழுத்துருவிலேயே இதனை சேர்த்துள்ளேன். இந்த லிங்கை கிளிக் செய்து இந்த எழுத்துருவை பதிவிறக்கிக் கொள்ளவும். பின்னர் உங்களுடைய கணினியில் உள்ள fonts போல்டரை திறக்கவும். அதில் உள்ள Latha என்கிற பெயரில் இருக்கும் இரண்டு எழுத்துருக்களையும் முதலில் பேக்கப் செய்து கொள்ளவும். அடுத்து fonts போல்டரில் உள்ள அவ்விரு எழுத்துருக்களையும் delete செய்யவும். இப்பொழுது நீங்கள் பதிவிறக்கிய எழுத்துருக்களை fonts போல்டரில் சேமிக்கவும்.
பயன்பாடு

இந்த குறியீட்டை பயன்படுத்த உங்கள் விசைபலகையில் உள்ள (`) பட்டனை அழுத்தினால் உங்களுக்கு Latha எழுத்துருவில் இந்திய ரூபாய்க்கான குறியீட்டை காணலாம்.
படைப்பு பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
Popularity: 44%
வணக்கம், இது ஒரு சிறிய படைப்பாக இருந்தாலும் இந்த ஷாட்கட்கள் அனைவருக்கும் பயன்படும். பொதுவாக ஒரு இணையதளத்தை ஓபன் செய்ய அட்ரஸ் பாரில் www.pudhuvai.com என தட்டச்சு செய்து என்டர் பட்டனை பிரஸ் செய்தால் உங்களுக்கு அந்த இணையதளம் திறக்கும்.

ஷாட்கட் முறை 1
உங்கள் விசைபலகையில் உள்ள CTRL + ENTER பட்டங்களை ஒரே நேரத்தில் பிரஸ் செய்வதின் மூலம் உங்களுடைய தளத்தை www. மற்றும் .com இவைகளை தட்டச்சு செய்யாமலேயே திறக்கலாம். உங்களுடைய அட்ரஸ் பாரில் உங்களுடைய இணையதளத்தின் பெயரை மட்டும் (உதாரணமாக pudhuvai) தட்டச்சு செய்து Ctrl + Enter ஐ ஒருசேர அழுத்தினால் உங்களுக்கு www.pudhuvai.com என அட்ரஸ் பாரில் முகவரி தோன்றி அந்த தளம் திறக்கும்.
ஷாட்கட் முறை 2
இது firefox இல் மட்டுமே வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. .com ஐ போல .net என முடியும் இணையதளத்தை திறக்க Shift + Enter என கொடுத்தால் www.yoursitename.net என திறக்கும். அதே போல .org என முடியும் இணையதளத்தை திறக்க Ctrl + Shift + Enter இந்த மூன்று பட்டன்களையும் ஒன்றாக அழுத்தினால் .org என முடியும் தளம் திறக்கும்.
அட்ரஸ் பாரில் இணையதளத்தின் பெயரை தட்டச்சு செய்து Alt + Enter கொடுத்தால் உங்களுடைய இணையதளம் புதிய டேபில் திறக்கும்.
Popularity: 38%
நீங்கள் சொந்தமாக வலைத்தளமோ அல்லது வலைப்பூவோ வைத்திருந்தால் அதனுடைய தரவரிசையை சோதிக்க பயன்படுவது Alexa Ranking ஆகும். இந்த சேவையை பயன்படுத்த நாம் Alexaவின் தளத்திற்க்குச்சென்று நாம் அறிந்துகொள்ளவேண்டிய தளத்தின் URL கொடுத்து அதன் தரவரிசையை தெரிந்து கொள்கிறோம். இது பொதுவாக அனைவரும் அறிந்ததே.
ஆனால் நீங்கள் உங்கள் இணைய உலவியில் எந்தெந்த தளத்திற்க்கு எல்லாம் செல்கிறீர்களோ அந்தந்த தளங்களின் தரவரிசை பட்டியலானது உங்கள் இணையஉலவியிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
முதலில் பயர்பாக்ஸ் பயனாளர்களுக்கு:
பயர்பாக்ஸ் பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக அவர்களே நீட்சியாக அளிக்கின்றனர். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த நீட்சியை பதிவிறக்கம் செய்து பயர்பாக்ஸோடு இணைத்துவிட்டால் நீங்கள் செல்லும் அனைத்து தளங்களின் தரவரிசை பட்டியல் பயர்பாக்ஸிலேயே தெரியும்.

அடுத்ததாக இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயனாளர்கள்:
பயர்பாக்ஸில் நீட்சியாக கிடைத்த இந்த சேவையானது Internet Explorerபயனாளர்களுக்கு டூல்பார் வடிவில் கிடைக்கின்றது. இந்த டூல்பாரை IE யோடு நிறுவிவிட்டால் இந்த Alexa Ranking சேவையானது Internet Explorer இல் நீங்கள் பார்வையிடும் இணையதளங்களின் Alexa Ranking ஐ காட்டிவிடும்.

படைப்பு பிடித்திருந்தால் கருத்துக்களும் வாக்குகளும் வரவேற்க்கப்படுகின்றன.
Popularity: 25%
இணையஉலவிகளில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தது மோஸில்லா பயர்பாக்ஸ் ஆகும் என்பது உலகறிந்த உண்மை. இன்றைய படைப்பில் இந்த பயர்பாக்ஸில் புக்மார்க்குகளை வகைப்படுத்தி பயன்படுத்துவது எப்படி என பார்க்கலாம். இணையதளங்கள் மற்றும் வலைபூக்களில் பல பிரிவுகள் உள்ளன சான்றாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தளங்கள்,வணிக சம்மந்தப்பட்ட தளங்கள், சினிமா சம்மந்தப்பட்டது என நிறைய வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பொதுவாக நாம் ஒரு பக்கத்தை புக் மார்க் செய்யும் போது அதனை அதன் Category யை வைத்து நாம் பிரித்து புக்மார்க் செய்வது கிடையாது எனினும் அவ்வாறு பயர்பாக்ஸில் செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் நீங்கள் புக்மார்க் செய்யவிரும்பும் இணையபக்கத்திற்க்கு செல்லவும். பின்னர் பயர்பாக்ஸில் bookmark this page என்பதை அழுத்தவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் “choose” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் “new folder” என்பதை அழுத்தி ஒரு புதிய “folder” ஐ உருவாக்கவும். பின்னர் “finish” என்பதை அழுத்தவும்.


அவ்வளவுதான் இந்த “Category” இல் இருக்கும் அனைத்து இணையப்பக்கங்களையும் இதனுள் நீங்கள் புக்மார்க் செய்து கொள்ளலாம்.

இதுபோல உங்கள் விருப்பதிற்கேற்றபடி எத்தனை Folder வேண்டுமாணாலும் உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.


பயர்பாக்ஸ் மட்டுமில்லாமல் “Internet Explorer,Chrome” போன்றவற்றிலும் இவ்வகையான புக்மார்க்குகளை உருவாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

Popularity: 23%