Archive for the 'இணைய உலாவி' Category

வலைபக்கத்தில் உள்ள படங்களை எளிய முறையில் சேவ் செய்வது எப்படி?

நீங்கள் வலைபக்கத்தில் உலா வரும் போது பல புகைபடங்களை நீங்கள் உங்கள் கணினியில் சேமிக்க விரும்புவீர்கள். அத்தகைய படங்களை நமது மவுஸினால் வலது கிளிக் செய்து அந்த படத்தை நம்முடைய  கணினியில் சேமிப்போம். இதுவே அந்த வலைபக்கத்தில் சுமாராக 10 அல்லது 20 படங்களுக்கு மேல் இருந்தால் அதனை சேமிக்க நாம் 10 அல்லது 20  முறை நம்முடைய மவுஸை வலது கிளிக் செய்து சேமிக்கத் தேவையில்லை.

Save bulk images

உங்களிடம் Firefox இணைய உலாவி இருந்தால் இந்த வேலையை செய்வது மிகவும் சுலபமே. இதற்காக நீங்கள் எந்த ஒரு மென்பொருளோ அல்லது Firefox நீட்சியோ(Addon) உங்கள் கணினியில் நிறுவத் தேவையில்லை.  உங்கள் கணினியில் Firefox மட்டும் நிருவியிருந்தாலே போதுமானது. முதலில் புகைப்படங்கள் இருக்கும் ஏதாவதொரு வலைப்பக்கத்தை திறந்து கொள்ளவும். வலைப்பக்கம் முழுவதும் லோடானவுடன் Firefox address bar இல் உள்ள ஐகானை கிளிக் செய்யவும். பின்னர் அதில் உள்ள More Information என்கிற பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு popup window திறக்கும். அதில் உள்ள Media பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு அந்த வலைபக்கத்தில் உள்ள அனைத்து Resource File களும் அதாவது அந்த பக்கத்தில் உள்ள படங்கள், அனிமேஷன்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் பட்டியலிடப்படும்.

Save bulk images from a webpage

இதில் Ctrl+A கொடுத்து அனைத்து கோப்புகளையும் தேர்வு செய்து அதில் உங்களுக்கு தேவையில்லாத கோப்புகளை மட்டும் நீக்கி விட்டு Save As பட்டனை கிளிக் செய்து அனைத்து கோப்புகளையும் ஒரே நேரத்தில் செமித்துக்கொள்ளவும்.

Popularity: 30%

வெப்சைட் URL ஷாட்கட்

வணக்கம், இது ஒரு சிறிய படைப்பாக இருந்தாலும் இந்த ஷாட்கட்கள் அனைவருக்கும் பயன்படும். பொதுவாக ஒரு இணையதளத்தை ஓபன் செய்ய அட்ரஸ் பாரில் www.pudhuvai.com என தட்டச்சு செய்து என்டர் பட்டனை பிரஸ் செய்தால் உங்களுக்கு அந்த இணையதளம் திறக்கும்.

ஷாட்கட் முறை 1

உங்கள் விசைபலகையில் உள்ள CTRL + ENTER பட்டங்களை ஒரே நேரத்தில் பிரஸ் செய்வதின் மூலம் உங்களுடைய தளத்தை www. மற்றும் .com இவைகளை தட்டச்சு செய்யாமலேயே திறக்கலாம். உங்களுடைய அட்ரஸ் பாரில் உங்களுடைய இணையதளத்தின் பெயரை மட்டும் (உதாரணமாக pudhuvai) தட்டச்சு செய்து Ctrl + Enter ஐ ஒருசேர அழுத்தினால் உங்களுக்கு www.pudhuvai.com என அட்ரஸ் பாரில் முகவரி தோன்றி அந்த தளம் திறக்கும்.

ஷாட்கட் முறை 2

இது firefox இல் மட்டுமே வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. .com ஐ போல .net என முடியும் இணையதளத்தை திறக்க Shift + Enter என கொடுத்தால் www.yoursitename.net என திறக்கும். அதே போல .org என முடியும் இணையதளத்தை திறக்க Ctrl + Shift + Enter இந்த மூன்று பட்டன்களையும் ஒன்றாக அழுத்தினால் .org என முடியும் தளம் திறக்கும்.

அட்ரஸ் பாரில் இணையதளத்தின் பெயரை தட்டச்சு செய்து Alt + Enter கொடுத்தால் உங்களுடைய இணையதளம் புதிய டேபில் திறக்கும்.

Popularity: 38%

Alexa Ranking ஐ இணைய உலவியில் இணைப்பது எப்படி?

நீங்கள் சொந்தமாக வலைத்தளமோ அல்லது வலைப்பூவோ வைத்திருந்தால் அதனுடைய தரவரிசையை சோதிக்க பயன்படுவது Alexa Ranking ஆகும். இந்த சேவையை பயன்படுத்த நாம் Alexaவின் தளத்திற்க்குச்சென்று நாம் அறிந்துகொள்ளவேண்டிய தளத்தின் URL கொடுத்து அதன் தரவரிசையை தெரிந்து கொள்கிறோம். இது பொதுவாக அனைவரும் அறிந்ததே.

ஆனால் நீங்கள் உங்கள் இணைய உலவியில் எந்தெந்த தளத்திற்க்கு எல்லாம் செல்கிறீர்களோ அந்தந்த தளங்களின் தரவரிசை பட்டியலானது உங்கள் இணையஉலவியிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

முதலில் பயர்பாக்ஸ் பயனாளர்களுக்கு:
பயர்பாக்ஸ் பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக அவர்களே நீட்சியாக அளிக்கின்றனர். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த நீட்சியை பதிவிறக்கம் செய்து பயர்பாக்ஸோடு இணைத்துவிட்டால் நீங்கள் செல்லும் அனைத்து தளங்களின் தரவரிசை பட்டியல் பயர்பாக்ஸிலேயே தெரியும்.

அடுத்ததாக இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயனாளர்கள்:
பயர்பாக்ஸில் நீட்சியாக கிடைத்த இந்த சேவையானது Internet Explorerபயனாளர்களுக்கு டூல்பார் வடிவில் கிடைக்கின்றது. இந்த டூல்பாரை IE யோடு நிறுவிவிட்டால் இந்த Alexa Ranking சேவையானது Internet Explorer இல் நீங்கள் பார்வையிடும் இணையதளங்களின் Alexa Ranking ஐ காட்டிவிடும்.

படைப்பு பிடித்திருந்தால் கருத்துக்களும் வாக்குகளும் வரவேற்க்கப்படுகின்றன.

Popularity: 25%

பயர்பாக்ஸில் புக் மார்க்குகளை வகைப்படுத்துவது எப்படி?

1 comment 07 December 2009 Under: இணைய உலாவி

இணையஉலவிகளில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தது மோஸில்லா பயர்பாக்ஸ் ஆகும் என்பது உலகறிந்த உண்மை. இன்றைய படைப்பில் இந்த பயர்பாக்ஸில் புக்மார்க்குகளை வகைப்படுத்தி பயன்படுத்துவது எப்ப‌டி என பார்க்கலாம். இணையதளங்கள் மற்றும் வலைபூக்களில் பல பிரிவுகள் உள்ளன சான்றாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தளங்கள்,வணிக சம்மந்தப்பட்ட தளங்கள், சினிமா சம்மந்தப்பட்டது என நிறைய வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பொதுவாக நாம் ஒரு பக்கத்தை புக் மார்க் செய்யும் போது அதனை அதன் Category யை வைத்து நாம் பிரித்து புக்மார்க் செய்வது கிடையாது எனினும் அவ்வாறு பயர்பாக்ஸில் செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் நீங்கள் புக்மார்க் செய்யவிரும்பும் இணையபக்கத்திற்க்கு செல்லவும். பின்னர் பயர்பாக்ஸில் bookmark this page என்பதை அழுத்தவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் “choose” என்பதை தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் “new folder” என்பதை அழுத்தி ஒரு புதிய “folder” ஐ உருவாக்கவும். பின்னர் “finish” என்பதை அழுத்தவும்.

அவ்வளவுதான் இந்த “Category” இல் இருக்கும் அனைத்து இணையப்பக்கங்களையும் இதனுள் நீங்கள் புக்மார்க் செய்து கொள்ளலாம்.

இதுபோல உங்கள் விருப்பதிற்கேற்றபடி எத்தனை Folder வேண்டுமாணாலும் உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயர்பாக்ஸ் மட்டுமில்லாமல் “Internet Explorer,Chrome” போன்றவற்றிலும் இவ்வகையான புக்மார்க்குகளை உருவாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 23%