பொதுவாக மின்னஞ்சலில் நம்முடைய Signature ஐ உருவாக்குவது அனைவரும் அறிந்ததே. இன்று இந்த signature சேவை அனைத்து மின்னஞ்சல் சேவையளிக்கும் நிறுவனங்களும் வழங்குகின்றன. Signature என்பது நாம் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் இறுதியில் நாம் செட் செய்து வைத்திருக்கும் தகவலை அந்த மின்னஞ்சலோடு சேர்த்துக்கொள்ளும். உதாரணமாக நம்முடைய கையெழுத்தை ஸ்கேன் செய்து அதை signature ஆக வைத்துக்கொள்ளலாம். இதனால் நாம் அனுப்பும் அனைத்தும் மின்னஞ்சலின் இறுதியில் நம்முடைய கையெழுத்தை பார்க்கலாம்.
Gmail இல் இந்த சேவை ஏற்கனவே இருந்தாலும் அதில் Rich Text Editor இல்லை. இதனால் எழுத்துகளின் வடிவங்களையோ, நிறத்தையோ அல்லது ஒரு புகைபடத்தையோ இணைக்க முடியாமல் இருந்தது. இதனை செய்ய ஜிமெயில் தரும் இதர நீட்சிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் இனி இது தேவையில்லை.

gmail தற்போது signature இல் Rich Text Editor ஐ சென்ற வாரத்தில் சேர்த்துள்ளது. இதனால் நம்முடைய signature ஐ HTML பார்மெட்டில் அமைத்துக்கொள்ளலாம். இதனை செய்ய Gmail இல் உள்ள Settings என்கிற லிங்கை கிளிக் செய்யவும். வரும் பக்கத்தில் Signature என இருக்கும் பகுதியில் உள்ள Textarea வில் உங்களுடைய Signature ஐ HTML முறையில் அமைத்துக்கொள்ளலாம்.
HTML Signature
Popularity: 35%
நாம் ஏற்கனவே Steganography தொழில்நுட்பம் அதாவது உங்களுடைய தகவல்களை ஒரு கோப்பினுள் ஒளித்து வைப்பது பற்றி புகைப்படத்தில் ரகசிய தகவல்களை மறைத்து வைக்க என்கிற படைப்பில் பார்த்தோம். தெரியாதவர்கள் இந்த படைப்பை பார்க்கவும்.

இதன் அடுத்த முன்னேற்றமாக நம் தகவல்களை QR தொழில்நுட்பத்தின் வழியாக Encode செய்யலாம். QR என்பதின் விரிவாக்கம் Quick Response ஆகும். ஜப்பானிய தொழில்நுட்பமான இது உலகெங்கும் இன்று நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. Bar Code நாம் அனைவரும் அறிந்ததே. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியே இந்த QR Code ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் உங்களுடைய தகவலை QR Code ஆக Encode செய்தவுடன் அந்த படத்தை நீங்கள் எங்கு எதில் வேண்டுமானாலும் அச்சடித்து வைத்துக் கொள்ளலாம்.

அந்த படத்தை scan செய்து Decode செய்தால் அதில் உள்ள தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதில் நீங்கள் உங்கள் விலாசம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது ஐந்து வரி உள்ள ஒரு தகவல் என எந்த தகவலை வேண்டுமானாலும் நீங்கள் Encode செய்து கொள்ளலாம். ஏன் நம் தாய் மொழியாம் தமிழில் கூட அந்த தகவல் இருக்கலாம். இது போன்ற தகவலை உள்ளடக்கிய இந்த புகைப்படத்தை நம் கைபேசி(Mobile Phone or Cell Phone) ஐ கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியும் என்பது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம். QR Reader என்கிற மென்பொருளை இணையத்தில் தேடி உங்களுடைய கைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள். என் நண்பர் வைத்துள்ள Nokia 5230 இல் வேலை செய்கிறது.
முதலில் இந்த சுட்டியை கிளிக் செய்து உங்களுடைய தகவலை Encode செய்யவும். பின்னர் இந்த சுட்டியை கிளிக் செய்து Decode செய்து பாருங்கள்.
Popularity: 37%
Facebook இணையதளத்தின் முலம் நீங்கள் உங்கள் வலைபக்கத்திற்கு Traffic ஐ கொண்டுவரலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் அடிப்படையில் உங்களுடைய வலைப்பக்கத்திற்கு Facebook Like Box ஐ இணைப்பது எப்படி என்று இன்று பார்க்கலாம். Facebook Like Box என்பது Google Followers போன்றதாகும். உங்களுடைய இணையதளத்தை/இணையபக்கத்தை விரும்பியவர்கள் Like என்கிற லிங்கை கிளிக் செய்து உங்களுடைய Like Box இல் இணைவார்கள்.
உதாரணமாக குமார் என்கிற நபர் உங்கள் பக்கத்தை Like செய்தவுடன் “Kumar likes <Your page name>” என்கிற செய்தி குமாரின் அனைத்து நண்பர்களுக்கும் தெரியவருகிறது. இதனால் அவர்களும் உங்கள் Facebook பக்கத்தை காண வாய்பிருக்கிறது.
இதனை செய்ய முதலில் உங்களுக்கு Facebook இல் ஒரு அக்கவுண்ட் இருக்க வேண்டும். அந்த அக்கவுண்டை வைத்து முதலில் Facebook இல் லாகின் செய்யவும். பின்பு இந்த சுட்டியை கிளிக் செய்து கொள்ளவும். இந்தப் பக்கத்தில் Community Page என்கிற இடத்தில் உங்களுடைய பக்கத்திற்கான தலைப்பை கொடுத்து Create Community Page என்கிற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கான பக்கம் தயார்.

Read more …
Popularity: 33%
நீங்கள் வலைபக்கத்தில் உலா வரும் போது பல புகைபடங்களை நீங்கள் உங்கள் கணினியில் சேமிக்க விரும்புவீர்கள். அத்தகைய படங்களை நமது மவுஸினால் வலது கிளிக் செய்து அந்த படத்தை நம்முடைய கணினியில் சேமிப்போம். இதுவே அந்த வலைபக்கத்தில் சுமாராக 10 அல்லது 20 படங்களுக்கு மேல் இருந்தால் அதனை சேமிக்க நாம் 10 அல்லது 20 முறை நம்முடைய மவுஸை வலது கிளிக் செய்து சேமிக்கத் தேவையில்லை.

உங்களிடம் Firefox இணைய உலாவி இருந்தால் இந்த வேலையை செய்வது மிகவும் சுலபமே. இதற்காக நீங்கள் எந்த ஒரு மென்பொருளோ அல்லது Firefox நீட்சியோ(Addon) உங்கள் கணினியில் நிறுவத் தேவையில்லை. உங்கள் கணினியில் Firefox மட்டும் நிருவியிருந்தாலே போதுமானது. முதலில் புகைப்படங்கள் இருக்கும் ஏதாவதொரு வலைப்பக்கத்தை திறந்து கொள்ளவும். வலைப்பக்கம் முழுவதும் லோடானவுடன் Firefox address bar இல் உள்ள ஐகானை கிளிக் செய்யவும். பின்னர் அதில் உள்ள More Information என்கிற பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு popup window திறக்கும். அதில் உள்ள Media பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு அந்த வலைபக்கத்தில் உள்ள அனைத்து Resource File களும் அதாவது அந்த பக்கத்தில் உள்ள படங்கள், அனிமேஷன்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் பட்டியலிடப்படும்.

இதில் Ctrl+A கொடுத்து அனைத்து கோப்புகளையும் தேர்வு செய்து அதில் உங்களுக்கு தேவையில்லாத கோப்புகளை மட்டும் நீக்கி விட்டு Save As பட்டனை கிளிக் செய்து அனைத்து கோப்புகளையும் ஒரே நேரத்தில் செமித்துக்கொள்ளவும்.

Popularity: 30%