வன்தட்டுகளை பார்டிஷன் செய்யும் இலவச மென்பொருள்
பொதுவாக நம்முடைய வன்தட்டுகளை பார்டீஷன் செய்ய Partition Magic,Paragon Partition Manager போன்ற சிறந்த மென்பொருட்கள் இருக்கின்றன. எனினும் இவைகளை நாம் விலை கொடுத்து வாங்க இருப்பதால், இலவச மென்பொருளை புதுவை.காம் வாசகர்களுக்கு சொல்லவேண்டுமே என முடிவு செய்து இணையத்தில் ஆராய்ந்தோம் அதில் GParted என்ற இலவச மென்பொருள் திறம்பட செயல்படுகிறது.
பொதுவாக லினக்ஸ் பயனாளர்கள் இந்த gpartedஐ பற்றி அறிந்திருப்பார்கள். காரணம் இந்த gpartedஆனது லினக்ஸ் சிடியில் default ஆக இருக்கும் ஆனால் விண்டோஸ் பயனாளர்கள் பயன்படுத்த ஏதுவாக இதே gparted ஆனது bootable ISOஆக இலவசமாகவே கிடைக்கிறது. இதனைக்கொண்டு நீங்கள் உங்களது கணினியை FAT,NTFS,Ext3,Ext4 போன்ற பார்மேட்டுகளில் வந்தட்டினை பார்டீஷன் பிரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

பதிவிறக்க சுட்டி
எங்களின் பதிவுகளில் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களையும் மற்றும் பதிவு பயனுள்ளதாக இருந்தால் எங்களுக்கு தவறாமல் கருத்துரையிட்டு செல்லவும்.
Popularity: 26%
|
|
பகிர்வு |

புதுவை.காம் நண்பர்களுக்கு இலவச மென்பொருளை அறிமுக படுத்தி , அவர்களது கணிணி பயன்பாட்டை எளிமை ஆக்க உதவும் உங்கள் ஆவாவையும் , முயற்சியையும் வரவேற்கிறோம்.
gparted தகவல் என்னை போன்றவற்களுக்கு புதிய மிகவும் பயனுள்ள ஒன்று.
உங்கள் முயற்ச்சிக்கு நன்றி.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி திரு. பாண்டியன். தொடர்ந்து எங்களை படைபுகளை பார்க்கவும்.
இது விண்டோஸ் கண்ட்ரோல் பேனலிலேயே செய்ய முடியுமே,எதற்கு தனியாக மென்பொருள்?
தங்களின் கருத்திற்கு நன்றி திரு.அறிவன்….விண்டோஸ் XP யில் இருக்கும் computer management மூலமாக பார்டீஷனை delete செய்யவும் பார்மேட் செய்யவும் மட்டுமே இயலும் இந்த இலவச மென்பொருள் மூலம் பார்டீஷன் செய்யப்பட்ட ஒரு டிரைவின் அளவை கூட்டவோ குறைக்கவோ மற்றும் லினக்ஸ் பார்டீஷனையும் கையாளலாம் என்பது கூடுதல் சிறப்பு…
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி
நல்ல தகவல் அதேபோல் EXTERNAL HARD DISK-ஐ அப்படி பார்டிசன் செய்வது…