புக்மார்கை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் பாகம் 2

05 March 2010 Under: படைப்புகள்

புக்மார்க்கை பற்றி பாகம் 1 இல் விபரமாக பார்த்தோம். மேலும் சென்ற பாகத்தில், நீங்கள் சேமித்து வைத்த புக்மார்க்குகள் உங்களது கணினியில் ஏற்படும் பழுது காரணமாக உங்களது விண்டோஸை நீங்கள் பார்மேட் செய்து நிறுவும்போது உங்களது சேமித்த புக்மார்க்குகள் அனைத்தும் கலைந்துவிடும். என்னதான் நீங்கள் புக்மார்க்குகளை எக்ஸ்போர்ட் செய்து HTML கோப்பாக பேக்கப் செய்து வைத்திருந்தாலும், பயனளிக்காது. சரி இதற்கென்ன வழி?

உங்களது புக்மார்க்குகளை ஆன்லைனில் சேமித்துக்கொள்வதன் மூலம் இந்த இழப்பை சரிசெய்துகொள்ளலாம். மேலும் உங்களது புக்மார்க்குகளை எந்த கணினியிலிருந்தும் பயன்படுத்திக்கொள்ளலாம்.முதலில் நீங்கள் உங்களது இணைய உலவியில் http://www.xmarks.com என்ற இணையத்திற்க்கு செல்லவும். பின்னர் Install Now என இருப்பதில் உங்களது இணைய உலவியை தேர்ந்தெடுக்கவும். சான்றாக FireFox, Internet Explorer, Safari etc..

X-marks ஐ நிறுவியவுடன் உங்களிடம் புதிய கணக்கை தொடங்குமாறு கேட்கும் உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து புதிய கணக்கை உருவாக்கிக்கொள்ளவேண்டும். உங்களது மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி வந்திருக்கும் அதனை உறுதி செய்துகொள்ளவும்.

அவ்வளவுதான் பின்னர் உங்களது இணைய உலவியில் X-marks இன் ஐகான் ஆனது தெரியும்.

அதனை கிளிக் செய்து உங்களது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து Synchronize Now என்பதனை அழுத்தவும். அவ்வளவுதான் இனி, உங்களது புக்மார்க்குகள் இணையதளத்தில்
Synchronize செய்யப்பட்டுவிடும். இனி, புதியதாக புக்மார்க்குகள் செய்ய செய்ய இதேபோலவே அடிக்கடி Synchronize செய்துகொள்ளவும்.

அவ்வளவுதான் இனி உங்களாது புக்மார்க்குகள் Xmarks இல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த புக்மார்க்குகளை உங்கள் கணினியை தவிர பிற இடத்திலிருந்து பயன்படுத்த http://www.xmarks.com என்ற முகவரிக்கு செல்லவும். அங்கு login என்பதனை தேர்வு செய்து உங்களது யூசர் நேம் பாஸ்வோர்ட் கொடுத்து லாகின் செய்யவும்.

பின்னர் My Bookmarks என்பதனை கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் உங்களது இணைய உலவியில் புக்மார்க் செய்த பக்கங்கள் இருப்பதை காணலாம் இதனைக்கொண்டு நீங்கள் உங்களது புக்மார்க்குகளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் நீங்கள் விண்டோஸை பார்மேட் செய்து நிறுவினாலும் நீங்கள் synchronize செய்து மீண்டும் புக்மார்க்கை உங்களது இணைய உல‌வியில் சேர்த்துக்கொள்ளலாம்.

படைப்பு பிடித்திருந்தால் வாக்களித்து கருத்துரை இடவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 11%



பகிர்வு

3 Responses to “புக்மார்கை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் பாகம் 2”

  1. saravanan says:

    Thanks for the information Niti.
    Today itself I will do this Xmarks.

Leave a Reply

Security Code: