புகைப்படத்தில் ரகசிய தகவல்களை மறைத்து வைக்க

உங்களுடைய மிக முக்கியமான தகவல்களை மறைத்து வைக்க இந்த steganography தொழில்நுட்பம் பயன்படுகிறது. பொதுவாக நாம் நம்முடைய முக்கியமான தகவல்களை மறைத்து வைக்க அந்த கோப்பிற்கு கடவுச்சொல் கொடுத்து வைப்போம் ஆனால் அந்த கோப்பினை மற்றவர்கள் பார்க்க நேர்ந்தால் இதில் ஏதோ முக்கியமான தகவல்கள் இருக்கிறது என்று அனைவராலும் கணிக்க முடியும்.

இந்த Image Steganography தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிறிய மென்பொருள் வழியாக உங்களுடைய .txt கோப்புகளில் உள்ள தகவல்களை உங்களுடைய ஏதாவதொரு புகைப்படத்தில் மறைத்துக்கொள்ளலாம். அந்த புகைப்படத்தை வேறொருவர் பார்த்தால் அதில் மறைத்துவைக்கப்பட்டுள்ள தகவல்களை எவராலும் பார்க்க முடியாது. அது மட்டுமின்றி இந்த புகைப்படங்களை யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பலாம். இந்த மென்பொருளை வைத்திருப்பவர்களால் மட்டுமே உங்கள் படத்தில் ஒளித்துவைக்கப்பட்ட தகவல்களை பார்க்க முடியும்.

Image Steganography

இந்த மென்பொருளை பதிவிறக்க இந்த சுட்டியை க்ளிக் செய்யவும்.

Input File இல் உங்களுடைய .txt  கோப்பையும் Input Image இல் உங்களுடைய புகைப்படத்தையும் தேர்வு செய்து Encode பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கான புகைப்படத்தை சேமிக்கவும். மீண்டும் அதில் உள்ள தகவலை திரும்பப்பெற HAL File இல் உங்களுடைய encode செய்யப்பட்ட புகைப்படத்தை தேர்வு செய்து Decode க்ளிக் செய்தால் உங்களுடைய மறைத்துவைக்கப்பட்ட தகவலைபெறலாம்.

குறிப்பு: இது Java தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதால் உங்களுடைய கணினியில் ஜாவா நிறுவியிருத்தல் அவசியம். ஜாவா இல்லையென்றால் இந்த சுட்டியை க்ளிக் செய்து பதிவிறக்கிக்கொள்ளவும்.  JAR  பைலை அப்படியே Double Click செய்து ரன் செய்யவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 91%



பகிர்வு

3 Responses to “புகைப்படத்தில் ரகசிய தகவல்களை மறைத்து வைக்க”

  1. kuwait kumar says:

    வாவ் அசத்தலான மென்பொருள் சகா..

    இந்த தொழில் நுட்பம் பற்றி ஏற்கெனவே தெரியும். அதனால், கடந்த 4 மாதமாக இதே போல மென் பொருளை தேடிக் கொண்டிருந்தேன். என் கையில் சிக்கவில்லை. ஆனால் உங்க கையில் சிக்கிவிட்டது. (உங்க கைக்கு சிக்கினாலே எங்க கைக்கு சிக்குன மாதிரிதான்.

    பயனுள்ள மென்பொருள் தந்ததற்கு நன்றி சகா..

  2. சகோதரர் குமாருக்கு நன்றி. இதே மென்பொருளை நானும் உருவாக்கியுள்ளேன். :)

Leave a Reply

Security Code: