Photoshop இல் எளிய முறையில் புகைப்படங்களுக்கு Watermark
இன்று பதிவுலகில் பலரும் பல பயனுள்ள தகவல்களை பதிவிடுகின்றனர். அதை மற்ற நண்பர்கள் மிக எளிதாக காபி செய்து அவர்களுடைய வலைபக்கத்தில் அவர்களே பதிவிட்டது போல வெளியிடுகின்றனர். அதில் அவர்கள் படைப்பின் உரிமையாளரின் பெயரை பதிவிட்டால் கூட பரவாயில்லை. அனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நேரத்தை ஒதுக்கி ஒருவர் வெளியிடும் படைப்புக்கு கிடைத்த பின்னோட்டங்கள், ஓட்டுகளை விட அதிகபடியான பின்னோட்டங்கள் மற்றும் ஓட்டுகள் அந்த படைப்பை காபி செய்து பதிவிட்டவருக்கு கிடைகிறது. என்ன கொடுமை சார் இது என்று பாதிக்கப்பட்டோரின் கவலைக் குரல் எனக்கு புரிகிறது. அவர்களுக்கு இந்த படைப்பு உதவியாய் இருக்கும் என் நம்புகிறேன்.
போட்டோஷாப்பில் watermark போடுவது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. இதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவிடும் படங்களை போட்டோஷாப்பில் திறந்து உங்களுடைய watermark டிசைனை அனைத்து படங்களுக்கும் காபி செய்தோ அல்லது ட்ராக் செய்தோ கொண்டு வர வேண்டும். ஒரு சில படங்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால் நிறைய படங்கள் இருந்தால் இது சற்று கடினமே. அதே போல ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களுடைய watermark டிசைனை திறக்க வேண்டும் இல்லையேல் ஒவ்வொரு முறையும் உங்களுடைய Watermark ஐ நீங்கள் புதிதாய் உருவாக்க வேண்டும்.
இதனை சரி செய்ய போட்டோஷாப்பில் Transparent mode இல் உங்களுடைய watermark ஐ உருவாக்கவும்.
![]()
பின்பு போட்டோஷாப்பில் உள்ள Edit மேனுவிற்கு சென்று அதில் உள்ள Define Brush Preset… என்கிற மெனுவை தேர்ந்தெடுக்கவும்.


வரும் விண்டோவில் உங்களுடைய பிரஷின் பெயரை தட்டச்சு செய்து OK பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய watermark ஒரு brush ஆக மாறிவிடும். இதனை பயன்படுத்த ஒரு புதிய விண்டோவில் ஒரு படத்தினை திறக்கவும். பின் Brush Tool (B) ஐ தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் புதிதாக உருவாக்கிய பிரஷ்ஷை தேர்ந்தெடுக்கவும்.

இப்பொழுது உங்களுடைய மவுஸினால் கிளிக் செய்தால் உங்களுடைய watermark தயார். படைப்பு பிடித்திருந்தால் உங்களுடைய கருத்துக்களை பதிவிடவும்.
Popularity: 100%
|
|
பகிர்வு |

வாட்டர்மார்க் அடையாளம் பதிவுகளிற்கு மிகவும் முக்கியமே. பதிவுகளை திருடுபவர்களுக்கு எதையெதை திருடுவதென்பதில் ஒரு விவஸ்தையே இல்லை. நானும் வலைப்பதிவு ஒன்று வைத்திருக்க வேண்டும் என ஆசைப்பட்டு, எனது வலைப்பதிவு ஆரம்பித்த சுயபுராணத்தை முதல் பதிவாக இட்டபோது அதைக்கூட திருடி வலைபதிவர் ஒருவர் தனது தளத்தில் போட்டுக்கொண்டதை சிலநாட்களின் பின்பு தற்செயலாக பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது.
நன்றி திரு பிரகாஷ்
நல்ல பதிவு மோகனகிருஷ்ணன் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
மிக்க நன்றி திரு வேலன்.