பிற இணையதளங்களில் நம் அவதாரை தெரிய வைப்பது எப்படி?

17 February 2010 Under: படைப்புகள்

இன்று பலர் பல இணையதளங்களில் இணைந்து அவர்களுடைய கருத்துக்கள், ஆக்கங்கள், படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இது போன்ற தளங்களை நீங்கள் கவனித்தால் அங்கு சிலரின் புகைப்படம் அவர்களின் தகவலுக்கு பக்கத்தில் தெரியும். அந்தப் புகைப்படத்தை அவதார் என்பார்கள். இது முதலில் உங்களுக்கு தெரியாது அதற்கு பதிலாக உங்களுடைய Default இமேஜ் தெரியும்.

சான்றாக :

இதைப் போன்று நாமும் நம்முடைய புகைப்படத்தை / அவதாரை நம் தகவலுக்குப் பக்கத்தில் தெரியவைக்கலாம். பெரும்பாலானோர் நம்முடைய Gmail அல்லது Yahoo அக்கவுண்டில் உள்ள நம் அவதார் தான் இங்கு தெரியும் என நினைப்பார்கள். ஆனால் அது தவறு. உங்களுடைய மெயில் அக்கவுண்டில் உள்ள அவதார் மற்ற இணையதளங்களில் தெரியாது. உதாரணமாக உங்களுடைய Google Profile இல் உள்ள உங்களுடைய அவதார் உங்களுடைய Google Talk இல் தெரியும் ஆனால் உங்களுடைய அந்த கூகிள் முகவரியை மற்ற தளங்களில் பயன்படுத்தி உங்களுடைய கருத்துக்களை சமர்பித்தால் உங்களுடைய கூகிள் அவதார் தெரியாது. சரி இது போன்ற இணையதளங்களில் உங்களுடைய அவதாரை தெரியவைப்பது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் http://www.gravatar.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்யவும். சற்று நேரத்தில் உங்களுடைய Activation Link உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். அதில் உள்ள சுட்டியை க்ளிக் செய்து உங்களுடைய Gravatar கணக்கை உறுதிபடுத்தவும். பின் திறக்கும் பக்கத்தில் உங்களுடைய Username மற்றும் password கொடுத்து உங்களுடைய கணக்கை லாகின் செய்யவும். இனி உங்களுடைய அவதாரை தற்பொழுது பதிவேற்றம் செய்யலாம். எத்தனை அவதார்களை வேண்டுமானாலும் பதிவேற்றலாம். அதே போல நீங்கள் எத்தனை மின்னஞ்சல் முகவரிகளை வேண்டுமானாலும் பதியலாம். உங்களுடைய அனைத்து மின்னஞ்சல் முகவரிகளும்  அவர்களுடைய activation link ஐ க்ளிக் செய்த பின்னரே அவைகளுக்கான அவதார்களை நீங்கள் பயன்படுத்தமுடியும். அதுமட்டுமில்லாமல் ஒரே அவதாரை நீங்கள் பல மின்னஞ்சலுக்கு பயன்படுத்தலாம்.

உங்களுடைய gravatar கணக்கில் லாகின் செய்த பின் My Account > Manage என்ற சுட்டியை க்ளிக் செய்தால் உங்களுடைய மினஞ்சல் முகவரிகள் மற்றும் அவதார்கள் தெரியவரும்.

குறிப்பு: உங்களுடைய அவதாரின் Hash Code பற்றி அறிய http://en.gravatar.com/site/check/admin@pudhuvai.com என்ற முகவரிக்கு செல்லவும். சுட்டியின் கடைசியில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை மறக்காமல் மாற்றவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 24%



பகிர்வு

8 Responses to “பிற இணையதளங்களில் நம் அவதாரை தெரிய வைப்பது எப்படி?”

  1. sakthi says:

    Very informative post. I am sure this Article will be very useful for most of the users, as I found useful.
    Thank u Pudhuvai Team

  2. படம் தெரியுதா பார்போம். டெஸ்ட்

  3. பயனுள்ள செய்தி நண்பரே.
    விளக்கம் அருமை.

  4. vanuronline says:

    நச்சுன்னு ஒரு தகவல். இது நல்ல தகவல்… :-)
    படைப்பிற்கு மிக்க நன்றி!!!

  5. படம் தெரியவில்லை நண்பரே

  6. @அறிவே தெய்வம்

    நண்பருக்கு வணக்கம்,

    உங்களுடைய அவதார் G or better என்கிற ரேடிங்கில் இருந்தால் தான் உங்கள் படம் தெரியும். அவதாரை பதிவேற்றம் செய்யும் போது அதன் ரேடிங்கை தேர்வு செய்யலாம். http://en.gravatar.com/site/check/arivhedeivam@gmail.com

    நன்றி

  7. இன்னும் படம் தெரியவில்லை, G ரேடிங்கிலும் தெரியவில்லை
    தங்களது மெயில் ஐடி அனுப்பவும். அட்டாச்மெண்ட் அனுப்புகிறேன்.
    வாழ்த்துகள்

  8. மின்னஞ்சல் செய்யவும் கண்டிப்பாக விளக்கம் தருகிறோம்.நன்றி
    admin@pudhuvai.com

Leave a Reply

Security Code: