கூகுள்:மின்னஞ்சலின் செய்தியிலேயே படத்தினை இணைப்பது எப்படி?
பொதுவாக மின்னஞ்சலில் ஒரு படத்தினை அனுப்பவேண்டுமானால் அதனை attachmentஆக அனுப்புவோம் இல்லையா? ஆனால் உங்களது செய்தியிலேயே புகைப்படங்களை இணைத்து preview தெரியுமாறுஅனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்க்கு google labசேவையை பயன்படுத்தவேண்டும். இதற்கு உங்களது கூகிள் கணக்கில் லாகின் செய்துகொள்ளவும்.

பின்னர் settings ஐ கிளிக் செய்து அதில் இருக்கும் Labsஎன்பதை கிளிக் செய்யவும்.
இப்போது Inserting Images என்ற plugin ஐ தேடிச்சென்று அதனை enableசெய்துகொள்ளவும். பின்னர் save changes என்பதனை கிளிக் செய்து மூடவும்.


இனி Compose Mail ல் உங்களது மெசேஜை தட்டச்சு செய்து பின்னர் நீங்கள் இணைக்க விரும்பும் படத்தை insert image ஐகானை கிளிக் செய்து படங்களை ஒவ்வொன்றாக இணைக்கவும்.

உங்கள் கணினியில் இருக்கும் படங்களையோ அல்லது இணையத்தில் இருக்கும் படங்களையோ இணைத்து அனுப்பலாம்.

படங்களை தேர்ந்தெடுத்தவுடன் படங்கள் மெசேஜ் உடன் preview ஆக தெரிவதை காணலாம்.

படங்களை Small,Medium,Latge,Orginal போன்ற அளவுகளில் தெரிய வைக்கலாம் அல்லது படத்தின்மீது மவுஸால் கிளிக் செய்து resize செய்துகொள்ளலாம். மேலும் நீங்கள் இணைக்கும் படங்கள் ஆக தெரிவதுடன் attachment கோப்பாகவும் சேர்ந்துவிடும் என்பதும் இதன் கூடுதல் சிறப்பு.
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்து கருத்துகளையும் வெளியிடவும்.
Popularity: 15%
|
|
பகிர்வு |
