கூகுள்:திறந்த மின்னஞ்சலை மூட மறந்துவிட்டீர்களா?

19 February 2010 Under: வெப்

நீங்கள் ஒரு இன்டர்நெட் சென்டருக்கு  அல்லது அலுவலகத்தில் இல்லாவிட்டால் உறவினர் அல்லது நண்பரின் வீட்டிறக்கு செல்கிறீர்கள். அங்கு உங்களது கூகுள் கணக்கை திறந்து மின்னஞ்சலை பார்க்கிறீர்கள் பிறகு உங்களது வீட்டிற்க்கு வந்துவிட்டீர்கள்  என வைத்துக்கொள்வோம். வந்தபின்னரே தான் உங்களுக்கு தெரிகிறது நாம் திறந்த கூகிளின் மின்னஞ்சல் பக்கத்தை மூடவில்லை என்று….இப்படி ஒரு நிகழ்வு நடந்துவிட்டால் அதற்கென கவலையடைய வேண்டாம் இதுபோல தருணங்களில் கூகிள் கணக்கை sign out செய்ய கூகுள் வழிவகை செய்துள்ளது. இதற்கு முதலில் இணைய இணைப்பை ஏற்படுத்தவும்,பின்னர் உங்களது  கூகுள் மின்னஞ்லை திறக்கவும்.

மின்னஞ்சல் பக்கம் திறந்தவுடன்  உங்களின் மின்னஞ்சல் பக்கத்தின் கீழே பார்தீர்களேயானால் Last account activity:  minutes ago on this computer.  Details என்று இருக்கிறதல்லவா?

அதற்கருகாமையில் இருக்கும் Details என்பதனை கிளிக் செய்யவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் Sign out all other sessions என்பதனை அழுத்தவும்.

அவ்வளவுதான் வேறு இட‌த்தில் sign in செய்யப்பட்டு திறக்கப்பட்ட உங்களது கூகுள் மின்னஞ்சல் பக்கமானது sign out செய்யப்பட்டுவிடும். இது அலுவலகங்களில் மற்றும் இன்டர்நெட் சென்டர்களில் கூகுள் கணக்கை பயன்படுத்துபவருக்கு பயனளிக்கும். படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் கருத்துரையிட்டு வாக்களிக்கவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 21%



பகிர்வு

9 Responses to “கூகுள்:திறந்த மின்னஞ்சலை மூட மறந்துவிட்டீர்களா?”

  1. Thanks for providing useful tips.Hope to see many more such tips in the days to come.

  2. grgpdy says:

    நல்ல பயனுள்ள தகவல். அனைவருக்கும் பிடித்தமான தகவல். வாழ்த்துக்கள் நித்தி.
    அன்புடன்
    ஜிஆர்ஜி
    புதுவை.

  3. Hashim says:

    Thanks A Lot..Appreciated..
    May god bless and make your life pleasant!!!

  4. jeni says:

    Its very useful for everyone. its very clear to know what to do in this. i know some useful tips from you. continue this kind of works. give many more useful things like that.

  5. Thanks Mr.Nadanasabapathy,menaga sathia,grg,hashim and Jeni…keep stay with us

  6. Senthil says:

    great!!!!!
    senthil

  7. Selvaraj pudupalli says:

    very good…thank you so much…….!

Leave a Reply

Security Code: