இணையவேகத்தை அதிகரிக்கும் Google Public DNS

07 January 2010 Under: வெப்

இணையதள வளர்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் கூளில் சேவைகளில் மகத்தான ஒரு சேவை Google public DNSஆகும்.

Public DNS சேவை என்றால் என்ன?
பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம்.
எடுத்துக்காட்டு: BSNL,AIRTEL,TATA INDICOM இன்ன பிற‌…இவ‌ர்க‌ளைத்தான் Internet Service Provider (ISP)என‌ அழைக்கின்றோம்.

நாம் பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை இணைய உலாவியில் தட்டச்சு செய்து என்டர் செய்தவுடன் அந்த குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) செர்வருக்கு சென்று பின்னர் அதன் மூலமாக நீங்கள் தட்டச்சு செய்த இணையத்தை தேடிப்பிடித்து  உங்களது இணைய உலாவியில் அப்பக்கத்தை திறக்க செய்கின்றது. இந்த சேவையை செய்வதே DNS ஆகும். இது அனைத்து இணையசேவை வழங்கும் நிருவனத்தினரும் தங்களுக்கென்று ஒரு Public DNS severஐ வைத்திருப்பார்கள். ஆனால் Google Public DNS இலவச சேவையை பயன்படுத்தினால் இணைய வேகத்தை அதிகரிப்பதுடன் இணையத்தில் கூடுதல் பாதுகாப்பையும் அளிக்கின்றது.

இந்த சேவையை உங்களது கணினியில் Confugure செய்வது மிகவும் எளிமையான ஒன்று. உங்களது கணினியில் Control Panel செல்லவும், பின்னர் Network Connections என்பதை அழுத்தவும்.

பின்னர் உங்களது நெட்வொர்க் டிவைஸின் மீது வலது கிளிக் செய்து Properties ஐ அழுத்தவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் Internet Protocol(TCP/IP)என்பதை தேர்வு செய்து பின்னர் Properties  ஐ அழுத்தவும்.பின்னர் Use the following DNS Server Addresses  என்பதை டிக் செய்து Preferred DNS Server என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4 எனவும் தட்டச்சு செய்து செய்யவும்.

இப்போது கணினியை restart செய்து இணைய இணைப்பை ஏற்படுத்தவும். இப்போது இணையதளங்களை சோதித்துப்பாருங்கள். கூடுதல் வேகம் மற்றும் பாதுகாப்பும் உங்களது கணினிக்கு கிடைக்கும்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

Blog Widget by LinkWithin

Popularity: 69%



பகிர்வு

7 Responses to “இணையவேகத்தை அதிகரிக்கும் Google Public DNS”

  1. good pulish more like this useful information about IT

  2. மிகவும் பயனுள்ள தகவல்
    விவரமாகவும்
    விளக்கமாகவும் சொன்னீர்கள் நண்பரே..

  3. விஸ்டா உள்ளிட்ட எல்லா இயங்குதளங்களுக்கும் இதே முறை தானா?
    என்பது எனது ஐயம் நண்பரே..

  4. Thanks for your comment Mr.Nanthakumaran…stay with our pudhuvai.com

  5. வணக்கம் முனைவரே…வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி…விஸ்டாவிற்க்கும் அதே மாதிரிதான் செட்டிங் செய்யவேண்டும்…ஐயம் ஏதாவது இருப்பின் தெரியப்படுத்தவும் நன்றி

  6. Habib says:

    நன்றி

  7. Indumathi Selvam says:

    Thanks… Useful information…….

Leave a Reply

Security Code: