கூகுள்: மின்னஞ்சல் முகவரிகளை கணினியில் சேமித்து வைப்பது எப்படி?
இன்றைய சூழலில் நாம் அனைவருமே செய்திகளை பரிமாறிக்கொள்ள பயன் படுத்துவது மின்னஞ்சல் சேவையைதான்!. சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் கணினிகுறித்து பேசும்போது அவர் அவரது மின்னஞ்சல் முகவரியின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை மறந்து விட்டதாக கூறினார். மேலும் அவர் கணினியை அடிக்கடி பயன்படுத்துபவரும் அல்ல. எனவே அவரைப்போன்றவர்கள் இதுமாதிரி பிரச்சனைகளை வாழ்கையில் சந்திப்பது சகஜம் தான். இதில் அவர் என்னிடம் வருத்தப்பட்டு கொண்ட விஷயம் அவர் அதில் சேமித்துவைத்திருந்த அவரது மின்னஞ்சல் முகவரிகள் எல்லாம் போய் விட்டது தான், ஆம் நம்மால் எத்தனை பேரின் மின்னஞ்சல் முகவரிகளை மனதில் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்க முடியும். நான் அவரிடம் சரி போனது போகட்டும் இனியாவது உங்களது மின்னஞ்சலில் நீங்கள் வைத்திருக்கும் களை அடிக்கடி பேக் அப் செய்து கணினியில் சேமித்து வைத்துகொள்ளுங்கள். உங்களது கணக்கு தொலைந்தாலும் உங்களது Contacts கள் உங்களிடம் இருக்கும். இத்தருவாயில் புதிய கணக்கு தொடங்கினாலும் அதில் உங்களது Contacts களை இம்போர்ட் செய்துகொள்ளலாம் என்று கூறினேன். அவரும் அப்படியா அதுபோல செய்ய இயலுமா? என்று கேட்டார் நானும் அவரிடம் நீங்கள் எந்த மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டேன். அவர் கூகுள் சேவையை பயன் படுத்துவதாக கூறினார். சரி இதனை நான் ஒரு பதிவாகவே எங்களது இணையதளத்தில் பதிவிடுகிறோம் தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறினேன், காரணம் அவரைபோல பாதிப்படைந்தவர் எத்தனையோ பேர் இருக்கலாம், அவர்களுக்கும் இக்கட்டுரை பயன்படட்டுமே..
முதலில் கூகுள் மின்னஞ்சலை திறக்கவும்.

உங்களது கணக்கில் நுழைந்து கொள்ளவும். பின்னர் contacts என்பதை கிளிக் செய்யவும். இப்போது திறக்கும் விண்டோவில் All Contacts என்பதை தேர்வு செய்யவும்.

பின்னர் Select All என்பதை கிளிக் செய்யவும்.

பின்னர் Export என்பதனை தேர்வு செய்து பின்னர் everyone
என தேர்வுசெய்து which export format என்பதில் Google CSV ஐ தேர்வுசெய்து Export ஐ அழுத்தவும்.

அவ்வளவுதான் உங்களது Contacts கள் அனைத்தும் உங்களது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்தக்கோப்பை நீங்கள் Ms Excel இல் திறந்து பார்க்கலாம். மேலும் உங்களது மின்னஞ்சலில் கோளாறு ஏற்பட்டு நீங்கள் வேறொறு புதிய மின்னஞ்சலை திறந்தவுடன் இதேபோல உங்களது கணக்கில் நுழைந்து Import என்பதனை அழுத்தி நீங்கள் சேமித்து வைத்திருக்கும் இந்த Google CSV கோப்பை இணைத்துவிடுங்கள். அவ்வளவுதான். உங்களது புதிய மின்னஞ்சலில் பழைய Contacts கள் இணைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளித்து கருத்துரையிடவும்.
Popularity: 14%







பின்னர் தோன்றும் விண்டோவில் create in என்பதில் new folder என்பதனை தேர்வு செய்யவும்.
இப்போது இந்த இணையதளத்தை எந்த வகையில் புக்மார்க் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்.





